Rahul Gandhi, Congress Election Manifesto: மக்களவை தேர்தல் (Lok Sabha Election 2024) தேதி இன்னும் சில நாள்களில் அறிவிக்கப்பட உள்ளன. மார்ச் இரண்டாம் வாரத்தில் தேர்தல் தேதி மற்றும் அட்டவணைகள் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், ஆளும் பாஜக மட்டுமின்றி எதிர்க்கட்சிகளும் தங்களின் சூறாவளி பரப்புரை பயணங்களை ஏற்கெனவே தொடங்கிவிட்டன. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

காங்கிரஸின் தேர்தல் அறிக்கை...?


குறிப்பாக, கட்சிகளுக்கு இடையேயான கூட்டணி பேச்சுவார்த்தை, தொகுதி பங்கீடு, தேர்தல் அறிக்கை தயாரிக்கும் பயணிகள் ஆகியவையும் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இதில், காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையின் வரைவு தயாரிக்கப்பட்டுவிட்டதாகவும், அது அக்கட்சியின் தலைவர் மல்லிகார்ஜூன கார்கேவிடம் ஒப்படைக்கப்பட்டுவிட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது. 


இதுகுறித்து மல்லிகார்ஜூன கார்கே அவரது X பக்கத்தில்,"பசுமைப் புரட்சி மற்றும் வெண்மைப் புரட்சியில் இருந்து பொதுத்துறை நிறுவனங்களை உருவாக்குவது வரை, தொலைத்தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்ப புரட்சியில் இருந்து தாராளமயமாக்கல் வரை, உள்ளடக்கிய நிர்வாகத்தில் இருந்து உரிமைகள் அடிப்படையிலான முன்னுதாரணத்திற்கு, இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி எப்போதும் இந்தியாவின் நலன் மற்றும் வளர்ச்சிக்கு உறுதி பூண்டுள்ளது" என குறிப்பிட்டுள்ளார்.


மேலும் படிக்க | தேர்தல் பத்திர நிதி விவகாரம்... SBI வங்கிக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் அவமதிப்பு வழக்குத் தாக்கல்!


அதுமட்டுமின்றி, "2024 மக்களவை தேர்தலுக்கான 'நீதி' அடிப்படையிலான எங்களின் வரைவு அறிக்கை தயாராக உள்ளது. காங்கிரஸின் தேர்தல் அறிக்கைக் குழுவால் இன்று என்னிடம் வழங்கப்பட்டது," என்று அந்த பதிவில் குறிப்பிட்டிருந்தார். நாட்டின் அரசு பணியாளர் தேர்வுகளில் முறைகேடு செய்பவர்களுக்கு எதிராக கடுமையான சட்டம் மற்றும் தண்டனையை காங்கிரஸ் அதன் தேர்தல் அறிக்கையில் முன்மொழிய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அரசாங்க ஆட்சேர்ப்பில் வெளிப்படைத்தன்மையைக் கொண்டுவருவதற்கான நடவடிக்கைகளை பரிந்துரைக்கும் எனவும் கூறப்படுகிறது. 



வேலை இல்லாதவர்களுக்கு ரூ.1 லட்சம்


காங்கிரஸ் கட்சியின் சார்பில் இந்தாண்டு தொடக்கத்தில் தொடங்கிய ராகுல் காந்தியின் "பாரத் ஜோடோ நீதி யாத்திரை" நடைபயணம் தற்போது ராஜஸ்தானில் நடைபெற்று வருகிறது. மணிப்பூரில் ஜனவரி 14ஆம் தேதி தொடங்கிய இந்த நடைபயணம், மும்பையில் வரும் மார்ச் 20ஆம் தேதி நிறைவடைய உள்ளது. தற்போது ராஜஸ்தானில் இந்த நடைபயணம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.


ராஜஸ்தானில் இன்று பேசிய ராகுல் காந்தி,"காங்கிரஸ் கட்சிக்கு வாக்களித்து ஆட்சிக்கு வந்தால், காலியாக இருக்கும் 30 லட்சம் அரசு பணிகளுக்கான இடங்களை நிரப்பும்" என தெரிவித்தார். குறிப்பாக, 25 வயதுக்கும் குறைவான டிப்ளமோ நிறைவு செய்தவர்களுக்கும், பட்டதாரிகளுக்கும் ஒரு வருட பயிற்சி வழங்கப்படும் அதில், அவர்களுக்கு 1 லட்ச ரூபாய் வழங்கப்படும் என தெரிவித்தார். வேலைவாய்ப்புக்கான உரிமையை காங்கிரஸ் மக்களுக்கு வழங்கும். நாட்டில் உள்ள ஒவ்வொரு இளம் டிப்ளமோ மற்றும் பட்டம் பெற்றவர்களுக்கு தனியார் மற்றும் அரசு துறைகளில் பயிற்சி பெற உரிமை உண்டு.


அதுமட்டுமின்றி, அரசு பணியாளர் தேர்வின்போது எவ்வித வினாத்தாள்களும் லீக் ஆகாத வகையில் சட்டம் இயற்றப்படும். அரசு ஆட்சேர்ப்பு தேர்வு செயல்முறையை தரப்படுத்துதல் மற்றும் அதில் நடக்கும் தவறுகளை நிறுத்தவும் முன்னுரிமை அளிக்கப்படும். மேலும், விவசாயிகளுக்கு பயிர்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலையில் சட்டப்பூர்வமான உத்தரவாதம் அளிக்கப்படும். "யுவ ரோஷ்னி" என்ற திட்டம் மூலம், தொழிலாளர்களுக்கு சமூகப் பாதுகாப்பு மற்றும் ஸ்டார்ட்அப்களுக்கு 5,000 கோடி ரூபாய் நிதி வழங்குவோம்" என்றார்.


மேலும் படிக்க | காஷ்மீரில் பிரதமர் மோடி: சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டபின் முதல் பயணம்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ