Kingfisher Beer Latest News Updates: கிங்ஃபிஷர் பீர் அருந்தும் மதிப்பிரியர்களுக்கு கவலை அளிக்கக்கூடிய தகவல் ஒன்று தற்போது வெளியாகி உள்ளது. United Breweries என்ற நிறுவனம்தான் கிங்ஃபிஷர் பீரை தயாரித்து வருகிறது. இந்நிறுவனம் எடுத்த ஒரு முடிவு தற்போது பலருக்கும் கவலையை ஏற்படுத்தி உள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஆம், தமிழ்நாட்டில் டாஸ்மாக் நிர்வாகத்தை போல், நமது அண்டை மாநிலமான தெலங்கானாவில் TGBCL நிர்வாகம், அங்கு மதுபான விற்பனையை நிர்வகித்து வருகிறது. அந்த வகையில், TGBCL நிர்வாகத்திற்கு கிங்ஃபிஷர் பீரின் அனைத்து பிராண்டுகளின் விநியோகத்தையும் முற்றிலுமாக நிறுத்திக்கொள்வதாக United Breweries அறிவித்துள்ளது. இது உடனடியாக அமலுக்கு வரும் எனவும் தெரிவித்துள்ளது. தொடர் நஷ்டத்தின் காரணமாக இந்த முடிவை எடுத்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது.


தெலங்கானாவில் உச்சத்தில் கிங்ஃபிஷர் பீர்


கடந்த இரண்டு ஆண்டுகளாக, நஷ்டத்தை போக்கிக் கொள்ள தொடர்ச்சியான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்ட போதும்,  அதன் தயாரிப்புகளுக்கு வழங்கப்படும் அடிப்படை விலையை உயர்த்ததாக காரணத்தால் என்று United Breweries இந்த முடிவை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இதனால் நஷ்டம் அதிகரித்து, மாநிலத்தில் தங்களின் செயல்பாடுகள் தேங்கமடைந்துவிட்டதாகவும் அந்நிறுவனம் நேற்று அறிக்கை மூலம் தெரிவித்துள்ளது.


கிங்ஃபிஷர் ஸ்ட்ராங், கிங்ஃபிஷர் அல்ட்ரா, கிங்ஃபிஷர் அல்ட்ராமேக்ஸ் உள்ளிட்ட பலவகை கிங்ஃபிஷர் பிராண்ட்களை United Breweries தயாரிக்கிறது. இவை தெலங்கானாவிலும் பிரபலமானவை ஆகும். தெலங்கானாவில் விற்பனை செய்யப்படும் மொத்த பீர்களில், கிங்ஃபிஷர் பீர்கள் மட்டும் 60% - 70% வரை இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அந்தளவிற்கு தெலங்கானாவில் கொடிக்கட்டி பறக்கும் கிங்ஃபிஷர் தனது விநியோகத்தை நிறுத்திக்கொள்வதாக தெரிவித்திருப்பது அங்கு மதுபிரியர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இதனால், மதுபான விற்பனை கூடங்களில் கிங்ஃபிஷர் பீர் கிடைப்பதில் சிக்கல் ஏற்படலாம்.


மேலும் படிக்க | Kerala | நடிகை ஹனி ரோஸ் பாலியல் துன்புறுத்தல் புகார்.. கேரள தொழிலதிபர் செம்மனூர் கைது!


கிங்ஃபிஷர் பீர் பிரச்னை - என்ன காரணம்?


மேலும், தெலங்கானா அரசு நுகர்வோருக்கான பீர்களின் விற்பனை விலையை அதிகரித்திருக்கும் வேலையில், தயாரிப்பு நிறுவனங்களுக்கு வழங்கும் அடிப்படை விலையை உயர்த்தாமல் இருந்துள்ளதாக தெரிகிறது. அதுமட்டுமின்றி, TGBCL நிர்வாகம் United Breweries நிறுவனத்திற்கு தொடர்ந்து பணம் கொடுப்பதில் கால தாமதம் செய்து வந்ததால், அதன் நஷ்டம் அதிகமாகிவிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கிங்ஃபிஷர் விற்பனை மூலம் ஒவ்வொரு ஆண்டும் அந்த மாநிலத்திற்கு ரூ.4,500 கோடிக்கு மேல் வருமானம் வருவதாகவும் கூறப்படுகிறது.


தொழில்துறை அளவிலான சவால்கள் குறித்து அரசிடம் பலமுறை முறையீடுகள் செய்தும், பணவீக்கத்தை ஈடுகட்ட அடிப்படை விலையை உயர்த்த வலியுறுத்தியும் இந்திய மதுபான உற்பத்தியாளர் சங்கம் முயற்சி செய்தது. ஆனால் துரதிர்ஷ்டவசமாக, இன்றுவரை எந்த தீர்வும் எடுக்கப்படவில்லை என்று United Breweries நேற்று வெளியிட்ட அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதற்கிடையில், பீர் விநியோகத்தை ஒழுங்குபடுத்தும் வகையில் இந்த பிரச்சினை குறித்து முடிவு எடுத்து, விரைவாக இதனை தீர்க்குமாறு தெலுங்கானா ஒயின் டீலர்கள் சங்கத் தலைவரான டி வெங்கடேஷ்வர் ராவ் அரசை வலியுறுத்தியுள்ளார். கடந்த கோடை காலத்திலும் மாநிலத்தில் மது விற்பனையாளர்கள் தங்களின் வியாபாரத்தை இழந்துள்ளனர் என்றும் கூறியுள்ளார்.


மேலும் படிக்க | இந்தியாவில் பிறந்தது முதல் “ஜென் பீட்டா” குழந்தை..2025யிலிருந்து உலகை ஆளப்போகும் புதிய தலைமுறை!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ