“ஜென் பீட்டா தலைமுறை என்பது 2025 முதல் 2029 வரை பிறக்கும் குழந்தைகள். 2010 முதல் 2024 வரை பிறந்த குழந்தைகள் ஜென் ஆல்பா குழந்தைகள் என அழைக்கப்படுகிறது. ஜென் பீட்டா குழந்தைகள் முற்றிலும் மாறுபட்ட உலகத்தை உருவாக்க முன்வருவார்கள். மாறாக அவர்களின் புத்திசாலி திறமைகள் பலமடங்கு வித்தியாசமாக யோசிக்கத் தோன்றும் எனக் கூறுகின்றனர்.
மிசோரமில் பசுமையான இயற்கைவளம் சூழ்ந்த தலைநகரமான ஐஸ்வால் என்ற பகுதியில் இந்தியாவின் முதல் ஜென் பீட்டா குழந்தை பிறந்தது, இது சமூக வலைத்தளம் முதல் அனைத்து இணையப்பக்கத்திலும் வைரலாகி வருகிறது. 2025 - 2039 வரை பிறக்கும் குழந்தைகளை ஜென் பீட்டா குழந்தைகள் என அழைக்கப்படுகிறது. மேலும் உலகின் எதிர்காலத்தை வடிவமைக்கப் போகும் இந்த புதிய தலைமுறையில் பிறக்கும் குழந்தைகளை இவ்வாறு கூறப்படுகிறது.
இந்தியாவின் வடகிழக்கில் அமைந்துள்ள மிசோரம் தலைநகரான ஐஸ்வால் பகுதியில் பழங்குடியின மக்கள் பெரும்பாலானோர் வசிக்கின்றனர். இங்கு மக்களின் கல்வி அறிவு விகிதம் 91.33 சதவீதம் எனக் கூறப்படுகிறது.
மிசோரமில் மக்கள் அவர்களின் தாய்மொழியான மீசோ மொழியைப் பேசுவார்கள். இங்கு அதிகமான மக்கள் கிறிஸ்துவர்கள். டர்ட்லாங்கில் உள்ள சினோட் மருத்துவமனையில் ஜனவரி 1 அன்று சரியாக 12:03 மணிக்கு ஜென் பீட்டா குழந்தை பிறந்தது.
இந்தியாவின் வருங்கால புதிய தலைமுறைகளின் முதல் தூணாக உருவெடுத்த குழந்தைக்கு பிரான்கி ரெம்ருதிகா ஜாடெங் என்று பெயர் சூட்டினர்.
இந்தியாவின் முதல் ஜென் பீட்டா ஆண் குழந்தையாக பிரான்கி பிறந்ததில் அவரது தாய் மிகுந்த மகிழ்ச்சியடைந்தார். மேலும் தாய் மற்றும் குழந்தை இருவரும் உடல் ஆரோக்கியமாக இருப்பதாக மருத்துவமனை தகவல் தெரிவித்தது.
2024 டிசம்பர் 31 அன்று ராம்சிர்மாவி மாலை 6 மணியளவில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் சரியாகக் குழந்தை 12:03 புதுவருடம் பிறந்து முதல் குழந்தை பிறந்தது இதுவே என்று கூறினர். மேலும் இதற்கு ஜென் பீட்டா வாரிசு என்று செல்லமாக குழந்தையை அழைத்தனர்.
இந்தியாவின் முதல் ஜென் பீட்டா குழந்தை பிரான்கி எனத் தெரிந்ததும் அவரது குடும்பத்தினர் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தனர்.
பிரான்கி ரெம்ருதிகா 3.12 கிலோ எடையுடன் உடல் ஆரோக்கியத்துடன் பிறந்ததாக மருத்துவமனை கூறியது.
இந்த தகவல்கள் இந்திய ரேடியோவின் அறிவிக்கையின்படி இந்த குழந்தையின் தகவல்கள் கூறப்படுகிறது. இந்த குழந்தை இந்திய வரலாற்றில் புதிய தலைமுறையைத் தொடங்கி வைக்க பிறந்த குழந்தையாகக் குறிக்கிறது.