மீண்டும் நிபா... 2 பேர் உயிரிழப்பை உறுதிப்படுத்திய அரசு - அச்சத்தில் கேரளம்!
Nipah Virus Death: கேரள மாநிலத்தில் நிபா வைரஸ் தாக்கியதின் காரணமாகவ இருவர் உயிரிழந்திருப்பதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா உறுதிப்படுத்தியுள்ளார்.
Nipah Virus Death: கேரளாவின் கோழிக்கோடு மாவட்டம் மருதோங்கரைப் பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவர் கடந்த மாதம் காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருந்தார். அவருக்கு எந்தவித காய்ச்சல் பாதிக்கப்பட்டிருந்தது என்று பரிசோதனை செய்யப்பட்டது. அதில் அவருக்கு நிபா வைரஸ் தொற்று பாதிப்புக்கான அறிகுறிகள் இருந்துள்ளது. அந்த நபர் சிகிச்சை பலனின்றி உயரிழந்தார். நிபா வைரஸ் பாதிப்பு காரணமாக அவர் இறந்திருக்கலாம் என்று சந்தேகம் இருப்பதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்திருந்தனர்.
காய்ச்சல் ஏற்பட்டு உயிரிழந்தவரின் மனைவி மற்றும் குழந்தைகளும் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களின் ரத்தத்தை பரிசோதித்ததில், நிஃபா வைரஸால் பாதிக்கப்பட்டிருப்பது உறுதியானது. இந்நிலையில், கேரளாவின் கோழிக்கோடு மாவட்டத்தில் நிபா வைரஸால் 2 பேர் உயிரிழந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா இன்று மாலை உறுதிப்படுத்தியுள்ளார்.
ஒரு தனியார் மருத்துவமனையில் இரண்டு இயற்கைக்கு மாறான இறப்புகள் பதிவாகியது. இதையடுத்து, நேற்று கோழிக்கோட்டில் மாவட்ட அளவிலான சுகாதார எச்சரிக்கை வெளியிடப்பட்ட சில மணிநேரங்களுக்குப் பிறகு இந்த உறுதிப்படுத்தல் வந்துள்ளது.
"நிலைமையை ஆய்வு செய்யவும், நிபா வைரஸ் மேலாண்மையில் மாநில அரசுக்கு உதவவும் ஒரு மத்திய குழு கேரளாவுக்கு அனுப்பப்பட்டது" என்று மாண்டவியா தெரிவித்துள்ளார். முதல் மரணம் ஆகஸ்ட் 30ஆம் தேதியும், இரண்டாவது மரணம் நேற்றும் நடந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கேரள அரசு கோழிக்கோட்டில் கட்டுப்பாட்டு அறையை அமைத்துள்ளது மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மக்கள் முகக்கவசங்களை பயன்படுத்த அறிவுறுத்தியுள்ளது.
முன்னதாக, கேரள முதல்வர் பினராயி விஜயன், மக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு அறிவுறுத்தினார், மேலும் பாதிக்கப்பட்டவர்களுடன் நெருங்கிய தொடர்பில் இருந்தவர்கள் சிகிச்சையில் இருப்பதால் கவலைப்பட வேண்டிய அவசியமில்லை என்றார்.
அதில் அவர்,"கவலைப்பட ஒன்றுமில்லை. இருவருடன் தொடர்பில் இருந்தவர்களைக் கண்டுபிடித்து சிகிச்சை அளிக்கப்படுகிறது. கவனமாக இருப்பதே நிலைமையைச் சமாளிப்பதற்கான திறவுகோல் ஆகும். சுகாதாரத் துறை தயாரிக்கும் செயல் திட்டத்திற்கு அனைவரும் ஒத்துழைக்க வேண்டும்" என்று அவர் கேட்டுக் கொண்டார். 2018ஆம் ஆண்டில் கோழிக்கோடு மற்றும் மலப்புரம் மாவட்டங்களில் நிபா வைரஸ் அதிகம் பரவியது. பின்னர் 2021ஆம் ஆண்டில், கோழிக்கோட்டில் நிபா வைரஸ் வழக்கு பதிவானது.
உலக சுகாதார அமைப்பின் படி, நிபா வைரஸ் பழம் உண்ணும் வெளவால்களால் ஏற்படுகிறது. மனிதர்களுக்கும் விலங்குகளுக்கும் ஆபத்தானது. சுவாச நோய்களுடன், இது காய்ச்சல், தசை வலி, தலைவலி, காய்ச்சல், தலைச்சுற்றல் மற்றும் குமட்டல் ஆகியவற்றை ஏற்படுத்தும்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ