கவுரி லங்கேஷ் -காக திரண்டெழுந்த அரசியல் கட்சிகள்!
நூற்றுக்கணக்கான சமூக ஆர்வலர்கள், பத்திரிகையாளர்கள், மக்கள் மன்றங்கள் மற்றும் பல அரசியல் கட்சி தொழிலாளர்கள் இனைந்து இன்று (செவ்வாய்) பெங்களுருவில் பேரணியில் ஈடுப்பட்டனர்.
பிரபல பத்திரிகையாளர், சமூக ஆர்வலர் கவுரி லங்கெஷ் ஒரு வாரத்திற்கு முன்னர் தனது வீட்டில் மர்ம நபர்களால் கொலை செய்ததை அடுத்து இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கர்நாடகா, ஜனசக்தி, ஆம் ஆத்மி கட்சி மற்றும் பல மாணவர் குழுக்கள் ஆகியோர் இந்த பேரணியின் ஒரு பகுதியாக இருந்தனர்.
CPI-M தனது ட்விட்டர் பக்கத்தில் இந்த ஆர்ப்பாட்ட பேரணியின் படத்தையும் பகிர்ந்துள்ளது.
கவுரி லங்கேஷ்:-
கடந்த செப் 6-ஆம் தேதி கர்நாடகா மாநிலத்தை சேர்ந்த, புகழ் பெற்ற எழுத்தாளர், பி.லங்கேஷ். அவரது மூத்த மகள், கவுரி லங்கேஷ். பல்வேறு பத்திரிகைகளிலும், கட்டுரைகள் எழுதி வந்த அவர், கன்னட மொழியில் வெளியாகும், 'லங்கேஷ் பத்திரிகே' பத்திரிக்கையின் ஆசிரியராகவும் இருந்து வந்தார்.
பெங்களூருவின் ராஜ ராஜேஸ்வரி நகரில், தன் வீட்டின் முன் நின்று கொண்டிருந்தபோது, அங்கு வந்த மர்ம நபர்கள் கவுரி லங்கேஷை துப்பாக்கியால் சுட்டுக் கொன்று விட்டு தப்பியோடி விட்டனர்.