மனைவிகளை மாற்றி விளையாடும் கேம்... ஏற்க மறுத்த மனைவியை மாதக்கணக்கில் பலாத்காரம் செய்த கொடூரன்!
மனைவிகளை மற்றவர்களுடன் உறவில் ஈடுபடுத்தும் விளையாட்டிற்கு இணங்க மறுத்ததால், மனைவியை கணவன் பல மாதங்களாக அடித்து துன்புறுத்தியுள்ளார். அந்த பெண் அளித்த புகாரின் பேரில் 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
தனது ஆசைக்கு இணங்க மறுத்த மனைவியை, அவரது கணவன் கொடூரமாக தாக்கி, இயல்புக்கு மாறான வகையில் வன்புணர்வு செய்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. இச்சம்பவம் ராஜஸ்தானில் நடந்துள்ள நிலையில், மத்தியப் பிரதேசத்தின் போபால் நகரில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. ராஜஸ்தானின் பிகானர் நகரில் உள்ள 5 ஸ்டார் ஹோட்டலின் மேலாளராக அவரின் கணவர் பணிபுரிவதாகவும், அவரை அந்த ஹோட்டலில் அடைத்து வைத்துதான் கொடுமைப்படுத்தியதாகவும் அந்த பெண் போலீசாரிடம் புகார் கொடுத்துள்ளார்.
இதுகுறித்து போலீசாரிடம் அளித்த புகாரில் அந்த பெண் கூறியதாவது," எனது கணவர் ஹோட்டல் அறையில் என்னை அடைத்து வைத்து, எனது மொபைல் பிடிங்கிவைத்துக்கொண்டார். இரண்டு நாள்கள் கழித்து, போதையில் அறைக்கு மீண்டும் வந்தார். மது குடிப்பது, போதைப்பொருளை பயன்படுத்துவது, பல பெண்களுடன் ஏன் ஆண்களுடன் உறவில் என்பதை அனைத்திலும் ஈடுபடுகிறார்.
மேலும் படிக்க | கொரோனா தடுப்பூசி வாங்குவதை நிறுத்தியது இந்திய அரசு! கோவிட் முடிந்துவிட்டதா?
மனைவிகளை மற்றவர்களுடன் மாற்றி, உறவு வைத்துக்கொள்வதை அவர்கள் விளையாட்டாக செய்துவந்தனர். இதில் ஈடுபட என்னையும் எனது கணவர் வற்புறுத்தினார். அதற்கு, நான் ஒத்துழைக்காததால் என்னை நாகரீகம் இல்லாதவள் எனக்கூறி கொடூர தாக்கினார். தொடர்ந்து, என்னிடம் இயல்புக்கு மாறான வகையில் உடலுறவு வைத்துக்கொண்டார்" என குறிப்பிட்டுள்ளார்.
கணவர் தாக்கியதில், அந்த பெண்ணுக்கு பல காயங்கள் ஏற்பட்டுள்ளன. மேலும், அந்த பெண்ணின் கணவன், மாமியார், அண்ணி ஆகியோர் தன்னிடம் ரூ. 50 லட்சம் வரதட்சணை கேட்டதாகவும் புகாரில் குறிப்பிட்டுள்ளார். கணவனின் நடத்தை குறித்து, கணவனின் குடும்பத்தாரிடம் பல முறை கூறியும் அவர்கள் அதை பொருட்படுத்தவில்லை என்றும், தான் நவீனப்பெண்ணாக இருப்பதாக கூறி தன் மீதே அவர்கள் பழியை சுமதியதாகவும் பாதிக்கப்பட்ட பெண் தெரிவித்துள்ளார்.
அவரின் கணவர் பல மாதங்களாக அவரை கொடுமை செய்து வந்ததால், அந்த பெண்ணின் உடல்நிலை மிகவும் மோசமைடந்துள்ளதாக கூறப்படுகிறது. உறவினர்கள் சிலர் பெண்ணின் தாய் வீடான மத்தியப் பிரதேசத்திற்கு அழைத்து வந்துள்ளனர். அங்குதான் அவர் புகார் அளித்துள்ளார்.
பெண் அளித்த புகாரை அடுத்து, அவரது கணவன், மாமியார், அண்ணி ஆகியோர் மீது வரதட்சணை தடுப்பு பிரிவு உள்ளிட்ட பல பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கின்றனர். மேலும், விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
மேலும் படிக்க | காங்கிரஸ் தலைவர் தேர்தல்: கடந்த 137 ஆண்டுகளில் இதுவரை தலைவர்களாக இருந்தவர்கள் யார்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ