இந்து மனைவியை மதம் மார சொன்ன இஸ்லாமிய கணவர்!
கணவர் வேறொரு பெண்ணையும் மறுமணம் செய்துக்கொண்டுள்ளார்.
பாந்த்ரா: மும்பையை சேர்ந்த முன்னால் மாடல் அழகி ஒருவர், தனது கணவரால் கொடுமையாக தாக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பாதிக்கப்பட்ட பெண் இந்து மதத்தினை சேர்ந்தவர், இஸ்லாமியர் ஒருவரை திருமணம் செய்த கொண்டார். இவர்களது வாழ்க்கை சுமூகமாக சென்ற போதிலும், சமீபகாலமாக அவரது கணவரால் மதம் மார கோரி துன்புருத்தப்பட்டு வந்துள்ளார்.
அவரது வேண்டுகோளுக்கு இவர் அடிபணிய மறுக்க, இவரது கணவர் வேறொரு பெண்ணையும் மறுமணம் செய்துக்கொண்டுள்ளார்.
பாதிக்கப்பட்ட பெண் இதுகுறித்து, பாந்த்ரா காவல்துறையில் வழக்கு தொடுத்துள்ளார். மேலும் இதுகுறித்து அவர் கூறுகையில், "நான் இந்துவாக இருந்த போதிலும், அவருடைய உணர்வுகளுக்கு மரியாதை கொடுத்து எவ்வித அழுத்தங்களும் கொடுக்காமல் வாழ்ந்து வந்தேன், ஆனால் அவர் அதற்கு கொடுத்த கைமாறு என்னை மிகவும் வேதனைக்கு ஆளாக்கியுள்ளது" என தெரிவித்துள்ளார்.