ஹைதராபாத் கொள்ளை சம்பவத்தில் 5 பேர் கைது!
இச்சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட நபர்கள் கர்நாடக மாநிலம் மைசூர் பகுதியை சேர்ந்தவர்கள்
ஹைதராபாத்: தெலுங்கானாவின் நாராயன்குடா பகுதியில் கொள்ளை சம்பவம் தொடர்பாக 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தெலுங்கானா ஹைதரபாத் பகுதியின் நாராயன்குடா பகுதியில் ரூ.1.26 கோடி கொள்ளை சம்பவம் தொடர்பாக 5 நபர்களை ஹைதராபாத் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட நபர்கள் கர்நாடக மாநிலம் மைசூர் பகுதியை சேர்ந்தவர்கள் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
கொள்ளையடிக்கப்பட்ட பணம் காவல்துறையினரால் மீட்கப்பட்டுள்ளது. மேலும் இச்சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.