குற்றவாளிகள் நான்கு பேரையும் சுட்டுக் கொன்றதால் தனது மக்களின் ஆத்மா சாந்தியடையும் என பாதிக்கப்பட்டவரின் தந்தை தெரிவித்துள்ளார்!!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கடந்த மாதம் 27 ஆம் தேதி ஹைதராபாத் அருகே உள்ள சம்சாபாத்தில் 26 வயதான பெண் கால்நடை மருத்துவர் ஒருவர் லாரி ஓட்டுனர்கள், உதவியாளர்கள் உள்பட நான்கு பேரால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு மூச்சு திணறடிக்கப்பட்டு கொல்லப்பட்டார். அவரது உடல் தீ வைத்து எரிக்கப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டது.


அந்த சம்பவம் நாடு முழுவதும் பேரதிர்வுகளை ஏற்படுத்தியது. இதையடுத்து சிவா,சென்ன கேசவலு, முகமது பாஷா, நவீன் ஆகிய நான்கு பேரையும் சம்பவம் நிகழ்ந்த 48 மணி நேரத்தில் போலீசார் கைது செய்தனர். இந்த குற்ற வழக்கை விசாரிக்க தெலுங்கானா அரசு விரைவு நீதிமன்றம் அமைத்திருந்தது. குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனை விதிக்க பல்வேறு அரசியல் கட்சிகளும் சமூக ஆர்வலர்களும், மாணவர்களும் வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் மற்றும் கண்டன பேரணியில் நடத்தினர்.


கைது செய்யப்பட்ட 4 பேரையும் 7 நாட்கள் காவலில் எடுத்து போலீசார் விசாரித்து வந்தனர். இந்நிலையில் இன்று அதிகாலை குற்றம் நடைபெற்ற இடத்தில் விசாரணை நடத்த போலீசார் நான்கு பேரையும் அழைத்துச் சென்றனர். தேசிய நெடுஞ்சாலை 44 ல் காவல்துறையினர் வாகனத்தில் அழைத்துச் சென்ற போது காவலர்களை தாக்கிவிட்டு குற்றவாளிகள் தப்ப முயன்றதாக கூறப்படுகிறது. இதனால் போலீசார் அவர்கள் நான்கு பேரையும் என்கவுன்ட்டரில் சுட்டுக் கொன்றனர்.


இந்த சம்பவம் குறித்து காவல்துறை அதிகாரி கூறுகையில்; '' தெலுங்கானாவில் பெண் கால்நடை மருத்துவரை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட நான்கு பேரும் காவல்துறையினருடனான மோதலில் கொல்லப்பட்டுள்ளனர்" எந்த்ரார். 
இதையடுத்து, குற்றவாளிகள் நான்கு பேரையும் சுட்டுக் கொன்றதால் தனது மக்களின் ஆத்மா சாந்தியடையும் என பாதிக்கப்பட்டவரின் தந்தை தெரிவித்துள்ளார். அவர் மேலும் கூறுகையில்; '' என் மகளுக்கு இன்று நீதி கிடைத்தது. என் மகள் இறந்து 10 நாட்கள் ஆகின்றன. இதற்காக காவல்துறை மற்றும் அரசாங்கத்திற்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். என் மகளின் ஆத்மா இப்போது நிம்மதியாக இருக்கும், '' என்று அவர் மேலும் கூறினார்.


இறந்த மருத்துவரின் சகோதரி இது குறித்து கூறுகையில்; '' எங்களுக்கு வழங்கிய ஆதரவுக்கு தெலுங்கானா காவல்துறை, தெலுங்கானா அரசு மற்றும் ஊடகங்களுக்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறேன் '' என்றார். 


இதற்கிடையில், பாதிக்கப்பட்டவருக்கு நீதி கோரி தேசிய தலைநகரில் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ள டி.சி.டபிள்யூ தலைவர் சுவாதி மாலிவால், '' கற்பழிப்பாளர்கள் தப்பிக்க முயன்றால் காவல்துறை என்ன செய்யும்? '' என்பதை நிரூபித்துள்ளது. 


நிர்பயாவின் (2012 டிசம்பரில் ஐந்து பேரால் கும்பல் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொடூரமாக சித்திரவதை செய்யப்பட்ட துணை மருத்துவர்) தாய் ஆஷா தேவி, '' எனது மகளை பாலியல் பலாத்காரம் செய்தவர்களும் தெலுங்கானா மருத்துவர் கற்பழிப்பு மற்றும் குற்றம் சாட்டப்பட்டவர்களைப் போலவே தண்டிக்கப்பட வேண்டும் என கண்ணீர் மழ்க தெரிவித்தார்.