கச்சிகுடா ரயில் நிலையத்தில் 2 ரயில்கள் நேருக்கு நேர் மோதி விபத்து..
ஹைதராபாத் கச்சிகுடா ரயில் நிலையத்தில் 2 ரயில்கள் நேருக்கு நேர் மோதி விபத்து; பலர் படுகாயம்..
ஹைதராபாத் கச்சிகுடா ரயில் நிலையத்தில் 2 ரயில்கள் நேருக்கு நேர் மோதி விபத்து; பலர் படுகாயம்..
தெலுங்கனா: ஹைதராபாத் அருகே ரயில் நிலையத்தில் நின்று கொண்டிருந்த எக்ஸ்பிரஸ் ரயில் மீது புறநகர் பயணிகள் ரயில் நேருக்கு நேர் மோதிய கோர விபத்தில் ஒருவர் பலியானதாகவும், 30-க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
தெலங்கானா மாநிலம் ஹைதராபாத் அருகே உள்ள கச்சிகுடா ரயில் நிலையத்தில் கொங்கு விரைவு ரயில் நின்று கொண்டிருந்தது. பயணிகளை இறக்கிவிட்டு, புதிய பயணிகளை ஏற்றிக் கொண்டு கொங்கு எக்ஸ்பிரஸ் ரயில் புறப்பட தயாரானது. அப்போது, திடீரென அதே தண்டவாளத்தில் வந்த புறநகர் பயணிகள் ரயில் அங்கு நின்று கொண்டிருந்த எக்ஸ்பிரஸ் ரயில் மீது மோதியது- இந்த கோர விபத்தில் ஒருவர் பலியானதாகவும், 30-க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
காயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு, அருகிலுள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும் தொடர்ந்து மீட்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. ரயில் நிலையத்தில் கொங்கு எக்ஸ்பிரஸ் ரயில் நின்று கொண்டிருந்த தண்டவாளத்தில் பயணிக்க புறநகர் பயணிகள் ரயிலுக்கு தவறாக சிக்னல் கொடுக்கப்பட்டுள்ளது- இதன் காரணமாகவே இந்த கோர விபத்து நேர்ந்துள்ளதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதற்கு மனித தவறு காரணமா அல்லது சிக்னலில் தொழில்நுட்ப கோளாறா என விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த விபத்தால் அந்த வழித்தடத்தில் ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டு, ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.