ஹைதராபாத் ஸ்கிராப் குடோனில் தீ விபத்து! 11 புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் பலி
ஹைதராபாத் ஸ்கிராப் குடோனில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் பீகாரில் இருந்து புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் 11 பேர் பலி; நிவாரணத் தொகை அறிவித்தார் முதலமைச்சர்...
ஹைதராபாத்: ஸ்கிராப் குடோனில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் பீகாரில் இருந்து புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் 11 பேர் உயிரிழந்தனர். செகந்திராபாத்தில் உள்ள போய்குடா பகுதியில் ஏற்பட்ட 12 பேர் தீயில் சிக்கியிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
ஹைதராபாத்தில் உள்ள குப்பை கிடங்கு ஒன்றில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் (Fire Accident) 11 பேர் உடல் கருகி உயிரிழந்தனர். இதுவரை 11 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ள நிலையில், எஞ்சிய ஒருவரும் தீயில் சிக்கி உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது.
இறந்தவர்கள், பீகாரில் இருந்து புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் அனைவரும் கட்டிடத்தின் முதல் தளத்தில் இருந்ததாக காவல்துறை மற்றும் தீயணைப்பு அதிகாரிகள் தெரிவித்தனர்.
இறந்துபோன பதினொரு பேரும் அடையாளம் காண முடியாத அளவுக்கு கருகிவிட்டனர், தீ விபத்துக்கான காரணம் கண்டறியப்பட்டு வருவதாக காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
தீ பற்றி எரிவதாக அதிகாலை 3 மணியளவில் தீயணைப்பு கட்டுப்பாட்டு அறைக்கு அழைப்பு வந்தது, சுமார் 4 மணி நேரத்திற்குப் பிறகு தீ முற்றிலும் அணைக்கப்பட்டது என்று காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
கட்டிடத்தின் முதல் தளத்தில் தூங்கிக் கொண்டிருந்த 11 பேரும், ஒரே ஒரு உள் சுழல் படிக்கட்டு மட்டும் இருந்ததால், தங்களைக் காப்பாற்றிக் கொள்ள முடியவில்லை. விபத்து நடைபெற்றபோது, தொழிலாளர்கள் அனைவரும் குடோனுக்குள் உறங்கிக் கொண்டிருந்ததாக நம்பப்படுகிறது.
மேலும் படிக்க | கராச்சி கிரிக்கெட் மைதானத்தில் தீ விபத்து! சமூக ஊடகங்களில் வைரலாகும் வீடியோ
தீ பற்றியது, மளமளவென்று பரவியதால், குடோனின் சுவர் இடிந்து விழுந்தது. அதில் சிக்கிய அனைவரும் வெளியே வர முடியாமல் சிக்கிக் கொண்டதாக நம்பப்படுகிறது.
தீ விபத்தில் பீகார் தொழிலாளர்கள் உயிரிழந்ததற்கு இரங்கல் தெரிவித்து, தெலுங்கானா முதல்வர் கே.சி.ராவ், இறந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சம் நிவாரணம் அறிவித்தார்.
சம்பவத்தில் உயிரிழந்த தொழிலாளர்களின் உடல்களை சொந்த ஊருக்கு கொண்டு செல்வதற்கான ஏற்பாடுகளை செய்யுமாறு தலைமை செயலாளருக்கு முதல்வர் கே.சி.ராவ் உத்தரவிட்டுள்ளார்.
மேலும் படிக்க | கொரோனாவுக்கு எதிரான ‘யூனிவர்சல் சூப்பர் தடுப்பூசி’ சாத்தியமா?
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews மற்றும் டிவிட்டரில் @ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR