ஹைதராபாத் கடும் மழை 3 பேரை பலி வாங்கியது!
ஹைதராபாதில் கடும் மழை பெய்து வருவதால், பள்ளி கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. 8 மாத குழந்தை உள்பட 3 பேர் மழை காரணமாக உயிர் இழந்துள்ளனர்.
இன்று காலை துவங்கி தொடர்ந்து 5 மணி நேரத்திற்கும் அதிகமாக கடும் மழை பெய்ததால் இந்த பாதிபு ஏற்பட்டுள்ளது.
இரவு முதலை மழை பொழிந்து வருவதால் சிலர் தங்களது அலுவலகங்களிலும், ரயில் நிலையங்களிலும் 12 மணிநேரங்களுக்கு மேல் சிக்கித் தவித்து வருகின்றனர்.
நிவாரன பணிகள் குறித்து தெலுங்கானா முதல்வர் கே. சந்திரசேகர் ராவ், நகராட்சி மாநகராட்சித் தலைவர் மற்றும் நகர காவல்துறை அதிகாரிகளுடன் ஆளோசித்துள்ளார்.
அவசர உதவிக்கு - 040-21111111 என்ற எண்ணை ஹைதராபாத் காவல்துறை அறிவித்துள்ளது.