போபால்: ஜம்மு-காஷ்மீரர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்துக்கு வழங்கும் 370 வது பிரிவை நீக்கியதன் மூலம், பிரதமர் நரேந்திர மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோருக்கு பூஜை செய்து வருகிறேன் என மத்திய பிரதேச முன்னாள் முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் கூறியுள்ளார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

நேற்று முன்னால் பிரதமர் நேருவை ஒரு குற்றவாளி என்று குறிப்பிட்ட மத்திய பிரதேச முன்னாள் முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் அதுக்குறித்து இன்று விளக்கம் அளித்துள்ளார். அவர் கூறியது, நாட்டின் பல பிரச்சனைகளுக்கு காங்கிரஸ் தான் காரணமாக இருந்துள்ளது. நான் நேருவைக் குறித்து கூறியது உண்மைகளை அடிப்படையாகக் கொண்டது. ஜம்மு-காஷ்மீர் தொடர்பாக பண்டிட் நேரு செய்த தவறை பிரதமர் மோடியால் சரி செய்யப்பட்டுள்ளது எனக் கூறினார்.


மேலும் பேசிய சிவராஜ் சிங் சவுகான், 'நேருஜி இந்திய சட்ட அமைச்சரின் பேச்சைக் கேட்கவில்லை. ஷேக் அப்துல்லா மீது தனிப்பட்ட முறையில் அதிக அன்பு நேரு ஜி ஏன் கொண்டிருந்தார்? 370வது பிரிவு காஷ்மீரை இந்தியாவுடன் ஒன்றிணைக்க அனுமதிக்கவில்லை. இந்தியாவின் உள் விவகாரமான காஷ்மீர் பிரச்சனையை தேசிய பிரச்சனையாக நேருவால் உருவாக்கப்பட்டது. காஷ்மீரின் மூன்றில் ஒரு பங்கு இந்தியாவின் ஒரு பகுதியாக இல்லாமல் போனதற்கு நேரு தான் காரணம்.


சவுகான் மேலும் கூறுகையில், "எங்களைப் பொறுத்தவரை, நாடு ஒரு துண்டு நிலம் அல்ல... இந்தியா ஒரு வெற்றிகரமான நாடு ... இந்தியா எங்கள் தாய். ஜம்மு-காஷ்மீரில் இருந்து 370 வது பிரிவை முடிவுக்குக் கொண்டு வந்த வரலாற்றுப் பணிகளை நாங்கள் செய்துள்ளோம். நேருவின் தவறை சரிசெய்தோம். முதலில் மோடி ஜி மற்றும் அமித் ஷா ஆகியோரை நான் தலைவராக பயபக்தியுடன் அவர்களை பார்த்தேன். ஆனால் 370 வது பிரிவை நீக்கியதன் காரணமாக தற்போது நான் அவர்களை வணங்குகிறேன்." எனக் கூறினார்.