கிழக்கு லடாக்கில் திங்கள்கிழமை இரவு சீன இராணுவத்தால் கொல்லப்பட்ட கர்னல் பி. சந்தோஷ் பாபுவின் தாய், தனது மகன் நாட்டின் நலனுக்காக மிக உயர்ந்த தியாகத்தை செய்ததில் பெருமிதம் கொள்வதாக தெரிவித்துள்ளார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கால்வான் பள்ளத்தாக்கின் விரிவாக்கத்தின் போது இரு படைகளுக்கிடையில் நேருக்கு நேர் மோதலில் இரண்டு ஜவான்களுடன் கொல்லப்பட்ட கட்டளை அதிகாரி சந்தோஷ் பாபு, தெலுங்கானாவின் சூர்யாபேட்டை மாவட்டத்தைச் சேர்ந்தவர்.


இந்தியா எல்லையில் சீன ராணுவம் தாக்குதல்: இந்திய வீரர்கள் 3 பேர் வீர மரணம்..!


"நான் சோகமாக இருந்தபோதிலும், என் மகன் இறப்பை எண்ணி பெருமை படுகிறேன். என் மகன் நாட்டிற்காக தனது வாழ்க்கையை அர்ப்பணித்திருக்கிறான். ஒரு தாயாக நான் சோகமாக இருக்கிறேன். அவர் என் ஒரே மகன்" என்று கண்ணீருடன் சந்தோஷ் பாபுவின் தாயார் மஞ்சுளா கூறுகிறார். சந்தோஷுக்கு அவரது மனைவி, ஒன்பது வயது மகள் மற்றும் நான்கு வயது மகன் உள்ளனர்.


செவ்வாய்க்கிழமை பிற்பகல் மகன் கொல்லப்பட்ட செய்தியைக் கேட்டு அவரது பெற்றோர் அதிர்ச்சியில் ஆழ்ந்தனர். "எங்கள் மருமகள் டெல்லியில் இருக்கிறார், நேற்று இரவு அவருக்கு தகவல் கிடைத்தது. இன்று பிற்பகலில் தான் எங்களுக்கு செய்தி கிடைத்தது," என்றும் மஞ்சுளா குறிப்பிடுகிறார்.


சந்தோஷ் ஆறாம் வகுப்பில் சைனிக் பள்ளியில் சேர்ந்ததை நினைவு கூர்ந்த அவரது தந்தை, "நான் இராணுவத்தில் பணியாற்ற விரும்பினேன், ஆனால் என்னால் இலக்கை அடைய முடியவில்லை. எனது கனவை என் மகன் மூலமாக அடைந்தேன். அவர் மிகவும் திறமையானவர் மற்றும் அவரது 15 ஆண்டு சேவையில் பல பதவி உயர்வுகளைப் பெற்றார்," என்று தெரிவித்துள்ளார்.


வீரமரணம் அடைந்த ராணுவ வீரர் பழனி குடும்பத்திற்கு ரூ.20 லட்சம் நிதியுதவி..!


சந்தோஷ், கடந்த ஒன்றரை ஆண்டுகளாக இந்தோ-சீனா எல்லையில் பணியாற்றி வந்தார். அவர் விரைவில் ஹைதராபாத்திற்கு மாற்றப்படுவார் என்று தனது பெற்றோரிடம் தெரிவித்திருந்தார், ஆனால் COVID-19 நிலைமை காரணமாக இந்த செயல்முறை தாமதமானது குறிப்பிடத்தக்கது.