பிரதமர் நரேந்திர மோடி, யாஸ் புயல் தொடர்பான மறு ஆய்வு கூட்டத்திற்காக மேற்கு வங்கம் சென்ற போது,  முதல்வர் மம்தா பானர்ஜி  அவரை 30 நிமிடங்கள் காத்திருக்க வைத்ததாக சர்ச்சை எழுந்ததை அடுத்து, இன்று செய்தியாளர் கூட்டத்தில், இந்த சம்பவம் குறித்து மம்தா பேனர்ஜீ தெளிவுபடுத்தினார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

"பிரதமர் மேற்கு வங்காளத்திற்கு வருவார் என்று நேற்று முன்தினம் மாலை தாமதமாக தான் எங்களுக்கு தகவல் கிடைத்தது. புயல் பாதிப்புக்குள்ளான பகுதிக்கு சென்று பார்வையிடுவது தொடர்பான திட்டத்தை நான் முன்பே அறிவித்தேன் என்பது அனைவருக்கும் தெரியும். ஒடிசா மற்றும் மேற்கு வங்காள முதலமைச்சர்களை சந்திக்க இருப்பதை அறிந்து, என பயண திட்டத்தை மாற்றி அமைத்து அவரை சந்திக்க வந்தேன்” என்றார்.


"இது முழுக்க முழுக்க அரசியல். வங்காளத்தின் நலனுக்காக நீங்கள் இங்கு வருகிறீர்கள் என்று நான் நினைத்தேன். பிரதமர் நரேந்திர மோடி (PM Narendra Modi) கேட்டுக் கொண்டால், மேற்கு வங்க மக்கள் நலனுக்காக அவர் காலில் விழவும் தயார்" என்று மமதா பேனர்ஜி கூறினார்.


ALSO READ | 10 கோடி பால் உற்பத்தியாளர்களுக்கு வேலை தருவீர்களா; PETA அறிவுரைக்கு அமுல் பதிலடி


மேற்கு வங்கத்திற்கு வந்த பிரதமர் மோடியை வரவேற்காதது குறித்து குறிப்பிட்ட அவர், "எனக்கென்று பயண திட்டங்கள் இருந்தது. சாகரில், எங்களுக்கு 20 நிமிடங்களுக்கு விமான போக்குவரத்து கட்டுபாட்டு அமைப்பான ஏடிசியிலிருந்து அனுமதி கிடைக்கவில்லை. பிறகு, நாங்கள் அங்கு சென்று, ​​பிரதமரை சந்திக்க நினைத்தோம். அப்போது கூட்டம் தொடங்கி விட்டதால், அவர்கள் தான் எங்களை ஒரு அறையில் அமரவைத்து காத்திருக்க வைத்தார்கள். நான் அவருடைய அனுமதியுடன் அறைக்குள் நுழைந்தேன். நாங்கள் திகாவுக்குச் செல்ல வேண்டும், வானிலை வேறு சரியில்லை என அனுமதி கேட்டேன்" என்றார்.


 “நான் அவருடைய அனுமதியுடன் கிளம்பினேன். எங்கள் தவறு என்ன? தலைமைச் செயலாளரும் நானும் பிரதமர் நரேந்திர மோடியுடன் பல நிமிடங்கள் பேசினோம், சூறாவளி நிலைமை குறித்து அவருக்கு விளக்கினோம். அந்த புகைப்படங்கள் எங்கே? அவர்கள் ஏன் அந்த புகைப்படங்களை பகிர்ந்து கொள்ளவில்லை? "


இதற்கிடையில்,  சுவேந்து அதிகாரியுடனான மறுஆய்வுக் கூட்டத்தில் கலந்து கொள்வதை தடுத்தது முதலமைச்சரின் ஈகோ என்று  பாஜகவின் மூத்த தலைவர்கள் குற்றம் சாட்டினர்.


ALSO READ | மக்கள் நலனை விட ஆணவத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கிறார் மம்தா பானர்ஜி: அமித் ஷா


தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR