‘எனக்கு ஆர்சனிக் விஷம் கொடுக்கப்பட்டது’ மூத்த ISRO விஞ்ஞானியின் Facebook பதிவால் பரபரப்பு!!
மதிய உணவுக்குப் பிறகு அளிக்கப்பட்ட சிற்றுண்டிகளில், தோசையுடன் அளிக்கப்பட்ட சட்னியில் இந்த அபாயகரமான விஷத்தின் டோஸ் கலக்கப்பட்டிருக்கலாம் என இஸ்ரோ விஞ்ஞானி கூறியுள்ளார்.
அதிர்ச்சியூட்டும் ஒரு கூற்றில், ஒரு உயர் இஸ்ரோ விஞ்ஞானி ஜீ மீடியாவுக்கு அளித்த பிரத்யேக பேட்டியில் 2017 ஆம் ஆண்டில் தனக்கு விஷம் கொடுக்கப்பட்டதாகக் கூறியுள்ளார். இது அதிகார வட்டங்களில் பரபரப்பை எற்படுத்தியுள்ளது.
தபன் மிஸ்ரா என்ற அந்த விஞ்ஞானி பேஸ்புக்கில் ஒரு செய்தியை வெளியிட்டார். அதில் அவர் மே 23, 2017 அன்று அவருக்கு ஆர்சனிக் ட்ரொக்ஸைடுடன் விஷம் கொடுக்கப்பட்டதாக கூறியுள்ளார்.
மிஸ்ராவின் கூற்று படி, இஸ்ரோ (ISRO) தலைமையகத்தில் ஒரு விளம்பர நேர்காணலின் போது அவருக்கு விஷம் கொடுக்கப்பட்டது.
மதிய உணவுக்குப் பிறகு அளிக்கப்பட்ட சிற்றுண்டிகளில், தோசையுடன் அளிக்கப்பட்ட சட்னியில் இந்த அபாயகரமான விஷத்தின் டோஸ் கலக்கப்பட்டிருக்கலாம் என அவர் கூறியுள்ளார்.
மிஸ்ரா தற்போது இஸ்ரோவில் மூத்த ஆலோசகராக பணியாற்றி வருகிறார். முன்னதாக, இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பின் (ISRO) அகமதாபாத்தை (Ahmedabad) தளமாகக் கொண்ட விண்வெளி பயன்பாட்டு மையத்தின் இயக்குநராக அவர் பணியாற்றினார்.
''லாங் கெப்ட் சீக்ரெட் '' அதாவது “நீண்ட காலமாக வெளியிடப்படாத உண்மை” என்ற தலைப்பில் அவர் வெளியிட்ட பேஸ்புக் பதிவில், உள்துறை பாதுகாப்புப் பணியாளர்கள் அவரை ஜூலை 2017 இல் சந்தித்து, அவருக்கு ஆர்சனிக் விஷம் கொடுக்கப்பட்டது குறித்து தகவல் கொடுத்ததாக மிஸ்ரா கூறினார். அதற்குப் பின்னர் தான் மருத்துவர்களை அணுகியதாகவும் அவர்கள் இதற்கான சிகிச்சையில் உதவியதாகவும் அவர் கூறியுள்ளார்.
ALSO READ: WHO Alert: 41 நாடுகளை சூறையாடியது புதிய கொரோனா, அடுத்தது என்ன?
தனக்கு விஷம் (Poison) கொடுக்கப்பட்டதன் காரணமாக, தான் கடுமையான சுவாச சிரமம், அசாதாரண தோல் வெடிப்புகள், தோல் உதிர்வு, பூஞ்சை தொற்று உள்ளிட்ட உடல்நலப் பிரச்சினைகளால் அவதிப்பட்டதாகவும் மிஸ்ரா கூறினார்.
மிஸ்ராவின் அப்போதைய மருத்துவ அறிக்கை:
"எனக்கு விஷம் அளிக்கப்பட்டதன் நோக்கம், உளவு தாக்குதல் என்று தோன்றுகிறது. மிகப்பெரிய ராணுவ மற்றும் பொருளாதார முக்கியத்துவம் கொண்ட செயல்களுக்கு முக்கிய பங்களிப்பை அளிக்கும் ஒரு விஞ்ஞானியை பாதையில் இருந்து அகற்றுவது முக்கிய நோக்கமாக இருந்திருக்கலாம். உதாரணமாக சிந்தடிக் அபர்சர் ரேடார் போன்றவற்றில் நிபுணத்துவம் உள்ளவர்கள் அவர்களது இலக்கில் இருந்திருக்கலாம்” என்று அவர் குற்றம் சாட்டினார்.
இஸ்ரோ விஞ்ஞானி தபன் மிஸ்ரா வெளியிட்டுள்ள இந்த தகவல்கள் இஸ்ரோவிலும், மேலும் பல அதிகார வட்டங்களிலும் அதிர்ச்சி அலைகளை உருவாக்கியுள்ளன.
இந்த விவகாரம் குறித்து விசாரித்து இந்தச் செயலில் ஈடுபட்ட நபர்களைக் கண்டுபிடிக்குமாறு மிஸ்ரா இந்திய அரசிடம் (Indian Government) வேண்டுகோள் விடுத்தார். மிஸ்ராவின் குற்றச்சாட்டுகளுக்கு இஸ்ரோ இன்னும் பதிலளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
நமது நாட்டு விஞ்ஞானிகள் (Scientists) நாட்டின் வளர்ச்சிக்காகவும், சமுதாயத்தின் நலனுக்காகவும் பல அரிய முயற்சிகளில் ஈடுபட்டு தங்கள் வாழ்நாளை அதற்காக தியாகம் செய்து வருகிறார்கள். அப்படிப்பட்டவர்கள் இப்படிப்பட்ட மறைமுக விதங்களில் தாக்கப்படுவது மிகவும் கவலைக்குரிய விஷயமாகும்.
ALSO READ: கொரோனா தடுப்பூசி தயாரிப்பில் இந்தியா உலகை வழிநடத்துகிறது: பில் கேட்ஸ் புகழாரம்
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR