தேவைப்பட்டால் ஜம்மு காஷ்மீருக்கு நேரில் சென்று அங்குள்ள நிலவரம் குறித்து ஆய்வு செய்யதயாராக இருப்பதாக உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தெரிவித்தார்!!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் 370 வது சட்டப்பிரிவு ரத்து செய்யது, அம்மாநிலம் 2 யூனியன் பிரதேசங்களாக பிரித்தது மத்திய அரசு. அந்த மாநிலத்தில் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டதால், கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அரசியல் கட்சி தலைவர்கள் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டனர். செல்போன், இணையதள சேவைகள் முடக்கப்பட்டன. காஷ்மீருக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதற்கு பலரும் கடும் எதிர்ப்பை தெரிவித்து வந்தனர். 


ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்தை நீக்கி 45 நாட்கள் ஆகியும் அம்மாநிலத்தில் பதட்டம் குறையவில்லை. இதுகுறித்த அனைத்து வழக்குகளையும் இன்று உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அமர்வு விசாரணை செய்தது. அப்போது, மத்திய அரசு தரப்பில் தலைமை வழக்கறிஞர் கே.கே.வேணுகோபால் ஆஜராகி, காஷ்மீரின் தற்போதைய நிலவரம் மற்றும் மத்திய அரசின் நடவடிக்கைகள் தொடர்பாக விளக்கினார். காஷ்மீரில் கட்டப்பாடுகள் படிப்படியாக தளர்த்தப்பட்டு வருவதாகவும், ஊடகங்களுக்கு தடை எதுவும் இல்லை என்றும் தெரிவித்தார்.


இதையடுத்து, ரஞ்சன் கோகாய் கூறுகையில்; "ஜம்மு காஷ்மீரில் இயல்பு நிலையை கொண்டு வருவதை  மத்திய அரசும் ஜம்மு காஷ்மீர் நிர்வாகமும் உறுதி செய்ய வேண்டும். பள்ளிகள், கல்லூரிகள், மருத்துவமனைகள் முழுமையாக இயங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் அதேசமயம் தேசிய பாதுகாப்பையும் மனதில் கொள்ள வேண்டும். உயர் நீதிமன்றத்தை மக்கள் அணுக முடியாத நிலை இருந்தால் அது சாதாரண பிரச்சினை அல்ல. அசாதாரண நிலை நிலவுவதாக தகவல் வருகிறது. எனவே, அவசியம் ஏற்பட்டால் நானே ஜம்மு காஷ்மீர் சென்று ஆய்வு செய்வேன்.


ஜம்மு காஷ்மீரில் இயல்பு நிலை திரும்புவது தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து செப்டம்பர் 30 ஆம் தேதிக்குள் மத்திய அரசும், ஜம்மு காஷ்மீர் நிர்வாகமும் பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய வேண்டும்" என அவர் தெரிவித்துள்ளார்.