இந்திய விமானப்படையினர் நேற்று இந்தியஎல்லைப்பகுதியில் பிரம்மாண்ட பயிற்சியில் ஈடுபட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்திய விமானப்படை நேற்று இரவு பஞ்சாப் மற்றும் ஜம்முவை ஒட்டியுள்ள எல்லைப்பகுதியில் மிகப்பெரிய தயார் நிலை ஒத்திகையில்  ஈடுபட்டதாக தகவல் வெளியானது. இந்த ஒத்திகைப் பயிற்சியில் பெரிய எண்ணிக்கையில் போர் விமானங்கள் ஈடுபட்டன. 


பாகிஸ்தான் போர் விமானங்கள் இந்திய வான்பரப்புக்குள் அத்துமீறி நுழைந்தால் பதிலடி கொடுப்பதற்கான தயார் நிலைக்காக இந்திய விமானப்படையின் ஜெட் ரக விமானங்கள் அதிவேகத்தில் இயக்கப்பட்டு ஒத்திகை நடைபெற்றதாக தெரிகிறது.