கடும் மழையால் சிக்கிமில் பல பகுதிகள் துண்டிக்கப்பட்டன: IAF உதவி!!
வடக்கு சிக்கிமில் உள்ள சக்யோங் மற்றும் பென்டோங் கிராமங்களுக்கு சனிக்கிழமை (ஜூலை 25, 2020) அத்தியாவசியப் பொருட்களை அளிக்க இந்திய விமானப்படை சாப்பர் Mi-17V5 பயன்படுத்தப்பட்டது.
நாடு முழுவதும் பருவமழை துவங்கிவிட்டது. சில இடங்களில் மிதமான மழையே இருக்கும் நிலையில், பல இடங்களில் கன மழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
சிக்கிமிலும் பலத்த மழை பெய்து வருகிறது. பல இடங்கள் பிரதான பகுதிகள் மற்றும் சாலைகளிலிருந்து துண்டிக்கப்பட்டு விட்டன.
வடக்கு சிக்கிமில் உள்ள சக்யோங் (Sakyong) மற்றும் பென்டோங் (Pentong) கிராமங்களுக்கு சனிக்கிழமை (ஜூலை 25, 2020) அத்தியாவசியப் பொருட்களை அளிக்க இந்திய விமானப்படை சாப்பர் Mi-17V5 பயன்படுத்தப்பட்டது.
பல நிலச்சரிவுகள் மற்றும் கடுமையான மழையாலும், பல பாலங்கள் அடித்துச் செல்லப்பட்டு விட்டதாலும், இப்பகுதி ஜொங்குவின் (Dzongu) பிற பகுதிகளிலிருந்து முற்றிலுமாக துண்டிக்கப்பட்டு விட்டது.
ஜூலை 10 முதல் இப்பகுதி அணுக முடியாத நிலையில் உள்ளது. இந்நிலையில், மாநில அரசு இந்திய விமானப் படையின் உதவியை நாடியது. கிழக்கு விமானக் கட்டளையின் உத்தரவின் பேரில் இந்திய விமானப் படையின் சாப்பர்கள் உதவிக்கு அனுப்பப்பட்டன.
சிக்கிமில் உள்ள மங்கனில் இருந்து சுமார் 5.5 டன் அத்தியாவசிய பொருட்கள் இன்று சக்யோங்கிற்கு கொண்டு செல்லப்பட்டன.
ALSO READ: அசாம், உத்தரபிரதேசம், குஜராத், உத்தரகண்ட் இல் பலத்த மழை பெய்யும்: IMD
இதற்கிடையில், கொரோனா வைரஸ் Covid -19 இன் அதிகரித்து வரும் பரவலை கட்டுப்படுத்தும் முயற்சியாக ஜூலை 21 (செவ்வாய்க்கிழமை) முதல் ஒரு வாரத்திற்கு கடுமையான லாக்டௌன் மாநிலத்தில் விதிக்கப்பட்டுள்ளது. லாக்டௌன் ஜூலை 21 முதல் ஜூலை 27 வரை இருக்கும் என அறிவிக்கப்படுள்ளது.