1 மாத மருத்துவ விடுப்பில் அனுப்பப்பட்ட அபிநந்தன்
டெல்லி ராணுவ மருத்துவமையில் சிகிச்சை நடைமுறைகள் சமீபத்தில் முடிந்ததை அடுத்து அபிநந்தனுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
டெல்லி ராணுவ மருத்துவமையில் சிகிச்சை நடைமுறைகள் சமீபத்தில் முடிந்ததை அடுத்து அபிநந்தனுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
ஜம்மு- காஷ்மீர் மாநிலம் புல்வாமாவில் கடந்த 14 ஆம் தேதி நிகழ்த்தப்பட்ட பயங்கரவாதிகளின் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் கடந்த பிப்ரவரி 26 ஆம் தேதி பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் செயல்பட்டு வந்த பயங்கரவாதிகளின் முகாம்கள் மீது இந்திய விமானப் படை அதிரடி தாக்குதல் நடத்தியது. இதனையடுத்து இந்தியாவின் மீது தாக்குதல் நடத்த வந்த பாகிஸ்தான் எப்16 விமானத்தை பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீருக்குள் பாகிஸ்தான் விமானத்தை விழ்த்தியது இந்தியா. அப்பொழுது ஏற்ப்பட்ட விபத்தில் சிக்கிய இந்திய விமானி அபிநந்தனின் பாகிஸ்தானால் கைது செய்யப்பட்டார்.
இந்தியா கொடுத்த தொடர்ந்து அழுத்தத்தால் இரண்டு நாள் கழித்து விங் கமாண்டர் அபிநந்தன் கடந்த மார்ச் 1ம் தேதி இரவு 9.17 மணியளவில் இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்டார். வாகா எல்லையில் இருந்து இந்திய அதிகாரிகளுடன் வெளியேறிய அபிநந்தன். அங்கிருந்து அம்ரித்சரஸ் சென்று விமானம் மூலம் மூலம் டெல்லி வந்தடைவார். நாடு முழுவதும் உள்ள மக்கள் அவரது வருகையை கொண்டாடினர்.
இதையடுத்து டெல்லியில் உள்ள காண்டோன்மெண்ட் மருத்துவமனையில் அவருக்கு மருத்துவ பரிசோதனைகள் நடைபெற்றன. அதில், அபிநந்தனின் உடலில் எந்த கருவிகளும் பொருத்தப்படவில்லை என்பது MRI Scan பரிசோதனயில் உறுதியானது.
இந்த நிலையில் அபிநந்தனுக்கு 1 மாதம் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மருத்துவ விடுப்பாக அவர் ஓய்வில் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.