முன்னால் இந்திய கிரிக்கெட் வீரர் மற்றும் பஞ்சாப் மாநிலத்தின் அமைச்சரான நவாஜோத் சிங் சித்து, பாகிஸ்தானின் பிரதமர் இம்ரான் கானை பாராட்டியுள்ளார். இம்ரான் கானின் இந்த நடவடிக்கை சமாதானத்திற்காக எடுக்கப்பட்டதாக நவாஜோத் சிங் சித்து தெரிவித்துள்ளார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்திய விமானப்படை வீரர் அபிநந்தனை நல்லெண்ண அடிப்படையில் எவ்வித நிபந்தனையுமின்றி அவரை நாளை விடுவிப்பதாகவும் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தெரிவித்துள்ளார். இவரின் இந்த அறிவிப்புக்கு பலதரப்பில் இருந்து பாராட்டு வந்தவண்ணம் உள்ளது.


இதுக்குறித்து பஞ்சாப் மாநிலத்தின் அமைச்சர் நவாஜோத் சிங் சித்து, தனது ட்விட்டர் பக்கத்தில், ஒவ்வொரும் பிரம்மாண்டமான செயல் செய்வதற்கு அவர்களுக்கான பாதையை அவர்களே முடிவு செய்யவேண்டும். உங்கள் நல்ல முடிவின் மூலம் கோடிக்கணக்கான மக்கள் சந்தோஷமாக இருக்கிறார்கள். ஒரு நாட்டில் மிகுந்த மகிழ்ச்சி அலை ஏற்பட்டுள்ளது. அபிநந்தனை குடும்பத்திற்க்காக நான் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன். இவ்வாறு ட்வீட் செய்துள்ளார்.