யாருக்காகவும், எதற்காகவும் நாட்டை விட்டுக்கொடுக்க மாட்டேன்: மோடி!
![யாருக்காகவும், எதற்காகவும் நாட்டை விட்டுக்கொடுக்க மாட்டேன்: மோடி! யாருக்காகவும், எதற்காகவும் நாட்டை விட்டுக்கொடுக்க மாட்டேன்: மோடி!](https://tamil.cdn.zeenews.com/tamil/sites/default/files/styles/zm_500x286/public/2019/02/26/140995-modi-7.jpg?itok=9lJW56QB)
நமது நாடு பாதுகாப்பாக இருக்கிறது; யாருக்காகவும் நாட்டை விட்டுக்கொடுக்க மாட்டேன் என பிரதமர் மோடி உறுதி!!
நமது நாடு பாதுகாப்பாக இருக்கிறது; யாருக்காகவும் நாட்டை விட்டுக்கொடுக்க மாட்டேன் என பிரதமர் மோடி உறுதி!!
நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பையும், துயரத்தையும், வேதனையையும் ஏற்ப்படுத்திய புல்வாமா தற்கொலை படை தாக்குதலுக்கு இந்தியா தக்க பதிலடி கொடுத்துள்ளது. கடந்த 12 நாட்களாக பதிலடி குறித்து ஆலோசனை மற்றும் அதற்க்கான செயல்பாடுகளை குறித்து நடவடிக்கையில் இந்திய ராணுவம் ஈடுபட்டு வந்தது.
இந்தநிலையில், இன்று அதிகாலை 3.30 மணியளவில் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் உள்ள சர்வதே எல்லையை ஒட்டியுள்ள எல்லைக் கட்டுப்பாட்டு பகுதியில் பயங்கரவாத இயக்கங்கள் செயல்பட்ட வந்த முகாம்கள் மீது இந்திய ராணுவம் 1000 கிலோ அளவிலான குண்டுகளை வீசியது. இந்த பதில் தாக்குதலில் JeM பயங்கரவாதிகளின் முகாம்கள் முற்றிலுமாக தகர்க்கபட்டதகவும், இந்த தாக்குதலில் 200-க்கும் மேற்பட்ட தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாகவும் தெரிவித்துள்ளனர். இந்த பதில் தாக்குதலை நடத்திய விமானப்படையை நாடுமுழுவதும் பாராட்டி வருகின்றனர்.
இந்நிலையில், பயங்கரவாத முகாம்கள் மீது தாக்குதல் நடத்திய விமானப்படை வீரர்களுக்கு தலைவணங்குவதாக பிரதமர் மோடி மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார். மேலும், நமது நாடு பாதுகாப்பாக இருக்கிறது; யாருக்காகவும் நாட்டை விட்டுக்கொடுக்க மாட்டேன் என உறுதியளித்துள்ளார்.
ராஜஸ்தான் மாநிலம் சுரு என்ற இடத்தில், பிரதமர் நரேந்திர மோடி பேசியபோது; ‛‛எதை விடவும் நாடு உயர்வானது என்பதில் நம்பிக்கை உடையவர்கள் நாம். அதனால் தான், எல்லையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள வீரர்கள், தங்கள் குடும்பத்தை விட நாட்டின் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவதை மகிழ்ச்சியுடன் ஏற்றுள்ளனர்.
அப்படிப்பட்ட வீரர்களுக்கும், அவர்களின் குடும்பத்தாருக்கம் நன்மை செய்யும் பணியில் மட்டுமே இந்த அரசு ஈடுபட்டுள்ளது. அதற்காகவே, ஒன் ரேங்க், ஒன் பென்ஷன் திட்டத்தை அமல்படுத்தியுள்ளோம். இதன் மூலம், ஆயிரக்கணக்கான முன்னாள் வீரர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தார் பயன் அடைந்துள்ளனர். நாட்டு மக்கள் பாதுகாப்புடன் வாழ நம் வீரர்களின் தியாகமே காரணம். அவர்களுக்கு நான் மீண்டும் தலை வணங்குகிறேன். எந்த சூழ்நிலையிலும், எதற்காகவும், யாருக்காவும், இந்த நாட்டை விட்டுக் கொடுக்க முடியாது. எதை விடவும் இந்த நாடு முக்கியமானது. வீரர்களின் அயராத உழையப்பாலும், வீரத்தாலும் இந்த நாடு பாதுகாப்பாக உள்ளது’’ இவ்வாறு அவர் பேசினார்.