IBM நிறுவன புதிய தலைமை செயல் அதிகாரியாக அரவிந்த் கிருஷ்ணா நியமனம்!
பிரபல அமெரிக்க IT நிறுவனமான IBM-யின் புதிய தலைமை செயல் அதிகாரியாக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அரவிந்த் கிருஷ்ணா நியமிக்கப்பட்டுள்ளார்!!
பிரபல அமெரிக்க IT நிறுவனமான IBM-யின் புதிய தலைமை செயல் அதிகாரியாக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அரவிந்த் கிருஷ்ணா நியமிக்கப்பட்டுள்ளார்!!
IIT முன்னாள் மாணவரான தொழில்நுட்ப நிர்வாகி அரவிந்த் கிருஷ்ணா, வர்ஜீனியா ரோமெட்டிக்கு அடுத்தபடியாக, "உலகத் தரம் வாய்ந்த அடுத்தடுத்த செயல்முறைக்கு" பின்னர் அமெரிக்க IT நிறுவனமான இன்டர்நேஷனல் பிசினஸ் மெஷின்ஸ் கார்ப் (IBM) இன் தலைமை நிர்வாக அதிகாரியாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
IBM இயக்குநர்கள் குழு கிருஷ்ணாவை நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாகவும், இயக்குநர்கள் குழுவின் உறுப்பினராகவும் ஏப்ரல் 6 முதல் தேர்வு செய்தது.
IBM நிறுவனத்தில் 40 ஆண்டுகள் பணியாற்றி தற்போது தலைமை செயல் அதிகாரியாக இருக்கும் விர்ஜினியா ரோமெட்டி (Virginia Rometty) பணி ஓய்வு பெற உள்ளார். இதை அடுத்து வரும் ஏப்ரல் 6 ஆம் தேதி அந்த பொறுப்பை ஏற்க உள்ள அரவிந்த் கிருஷ்ணா இப்போது ஐபிஎம்-ன் சீனியர் வைஸ் பிரசிடன்டாக இருக்கிறார். மைக்ரோசாப்ட் தலைவர் சத்ய நாதெள்ள, (Satya Nadella) கூகுள் மற்றும் ஆல்ப பெட் (Google and Alphabet) தலைவர் சுந்தர் பிச்சை, (Sundar Pichai) மாஸ்டர்கார்டு தலைவர் அஜய் பங்கா, (Ajay Banga) அடோப் (Adobe) சி.இ.ஓ.சாந்தனு நாராயணன் (Shantanu Narayen) , பெப்சி முன்னாள் தலைவர் இந்திரா நூயி (Indra Nooyi) ஆகியோரின் வரிசையில் மீண்டும் ஒரு இந்தியர் பிரம்மாண்டமான நிறுவனத்தின் தலைவராக பொறுப்பேற்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
57 வயதான கிருஷ்ணா 1990 இல் IBM-ல் சேர்ந்தார், கான்பூரில் உள்ள இந்திய தொழில்நுட்ப நிறுவனத்தில் இளங்கலை பட்டமும், அர்பானா-சாம்பேனில் இல்லினாய்ஸ் பல்கலைக்கழகத்தில் மின் பொறியியலில் PhD முடித்துள்ளார்.