ரேபிட் டெஸ்ட் கிட்டை கொண்டு 2 நாட்களுக்கு சோதனை செய்ய வேண்டாம்: ICMR அறிவுறுத்தல்
அடுத்த இரண்டு நாட்களுக்கு ரேபிட் டெஸ்ட் கிட் பயன்படுத்த வேண்டாம் என்று, அனைத்து மாநிலங்களையும், ICMR கேட்டுக் கொண்டுள்ளது!!
அடுத்த இரண்டு நாட்களுக்கு ரேபிட் டெஸ்ட் கிட் பயன்படுத்த வேண்டாம் என்று, அனைத்து மாநிலங்களையும், ICMR கேட்டுக் கொண்டுள்ளது!!
இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று தீவிரமாக பரவி வரும் நிலையில், கொரோனா வைரஸ் தொற்றை விரைவில் கண்டறியும் சோதனை கருவியான ரேபிட் டெஸ்ட் கிட்டை சீனாவில் இருந்து கொள்முதல் செய்யப்பட்டது. ஆனால், அது தவறான முடிவுகளை காட்டுகிறது என்று மேற்கு வங்க அரசு ஏற்கனவே குற்றம் சாட்டியிருந்தது.
இதை தொடர்ந்து, இன்று ராஜஸ்தான் அரசும் இதே போன்ற ஒரு குற்றச்சாட்டை முன்வைத்து. இது குறித்து ICMR-க்கு கடிதம் ஒன்றை எழுதியிருந்தது. இந்நிலையில், அடுத்த இரண்டு நாட்களுக்கு எந்த மாநிலமும் துரித பரிசோதனை கருவியான ரேபிட் டெஸ்ட் கிட்டை
பயன்படுத்த வேண்டாம் என்று ICMR சார்பில் கங்காதர் இன்றைய செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறுகையில்... இந்த கருவியை 20 டிகிரி செல்சியஸுக்கும் குறைவாக வெப்பநிலை உள்ள பகுதியில் வைத்து பாதுகாக்க வேண்டும். வெப்பம் அதிகமாக உள்ள இடத்தில் வைத்திருந்தால் சரியாக முடிவுகளை காட்டாது என்பது போன்ற சில நிபந்தனைகளை ICMR தெரிவித்து இருந்தது. மாநிலங்களில் இதுபோன்ற நிபந்தனைகளைப் பின்பற்றி சோதனை நடத்தினார்களா, இல்லையா என்பதுபற்றி ICMR அடுத்த இரண்டு நாட்கள் ஆலோசனை நடத்தும் என்று தெரிகிறது. இந்த ஆய்வுக்கு பிறகு அடுத்தகட்ட நடவடிக்கையை ICMR அறிவிக்கும்.
ICMR நிபுணர் கூறுகையில், டெல்லியில் விரைவான சோதனை கருவிகள் மாநிலங்களுக்கு அனுப்பப்படுவதற்கு முன்பு சோதனை செய்யப்பட்டன, மேலும் அவை 71% துல்லியத்தைக் காட்டியுள்ளன. கோவிட் -19 ஆன்டிபாடிகள் உருவாக்க ஏழு நாட்கள் ஆனதால் அதன் துல்லியம் சதவீதம் காலப்போக்கில் வளர்ந்து வருவதாக அவர் கூறினார்.
கங்காகேத்கர் கூறுகையில், ஆன்டிபாடி சோதனைக் கருவிகளை சப்ளை செய்யும் நிறுவனங்கள் தவறாக செயல்படுவதாகக் கண்டறியப்பட்டால் அவற்றை எழுப்ப முடியும். விரைவான சோதனைக் கருவிகள் சில நிமிடங்களில் முடிவுகளைத் தருகின்றன, மேலும் அவை சோதனைத் திறனை விரிவாக்குவதற்கும் கட்டுப்படுத்தும் மூலோபாயத்திற்கும் முக்கியமானதாகக் கருதப்படுகின்றன.
தமிழகத்திலும் ரேபிட் டெஸ்ட் கிட் பரிசோதனை கருவிகளை கொண்டு சோதனைகள் நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், தமிழகத்திலும், அடுத்த இரண்டு நாட்களுக்கு நிறுத்தப்படும் என்று தெரிகிறது