ஐடியா மற்றும் வோடாஃபோன் நிறுவனம் இன்று இணைந்தது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஐடியா செல்லுலர் நிறுவனம் வோடாஃபோன் நிறுவனத்துடன் இன்று இணைந்தது. இந்த இணைப்பின் மூலம் இந்தியாவில் அதிகம் வாடிக்கையாளர்களைக் கொண்ட நிறுவனமாக இப்புதிய நிறுவனம் விளங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. சுமார் 394 மில்லியன் வாடிக்கையாளர்கள் இப்புதிய நிறுவனத்திற்கு கிடைப்பார்கள் என்று கூறப்படுகிறது.


இந்த இணைப்பு ஒப்பந்தத்திற்கு செபி, தொலைத்தொடர்புத் துறை மற்றும் ரிசர்வ் வங்கி போன்ற அமைப்புகள் அனுமதியளிக்க வேண்டியுள்ளது. இந்த ஒப்பந்தம் நடைமுறைக்கு வந்தவுடன் வோடாஃபோனின் இண்டஸ் டவர்ஸ் லிமிடட், சர்வதேச வலையமைப்பு சொத்துக்கள் மற்றும் தகவல் தொழில்நுட்ப வசதிகள் தொடர்ந்து வோடாஃபோனின் கட்டுப்பாட்டிலேயே இருக்கும். இதர அமைப்புகள் புதிய அமைப்புகளின் கீழே இருக்கும். 


வோடாஃபோன் இந்தியா மற்றும் வோடாஃபோன் மொபைல் சர்வீசஸ் இணைந்து ரூ 45, 403 கோடியை ஆண்டு வருமானமாக ஈட்டுகின்றன. ஐடியாவின் வருமானம் ரூ. 36,000 கோடிகளாகும்.