போலி சாதி சான்றிதழ் கொடுத்திருந்தால் பதவியை பறிக்கலாம்: சுப்ரீம் கோர்ட்
போலி சாதி சான்றிதழ் கொடுத்தது தெரிய வந்தால் பணி அல்லது பட்டத்தை உடனடியாகப் பறிக்கலாம் என்று சுப்ரீம் கோர்ட் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
போலி சாதி சான்றிதழ் கொடுத்து அரசு பணி பெற்றிருந்தால் அவர்களை பணிநீக்கம் செய்யலாம் என மகாராஷ்டிர அரசு சமீபத்தில் உத்தரவிட்டிருந்தது. இந்த உத்தரவை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் மகாராஷ்டிர அரசின் உத்தரவு செல்லாது என மும்பை ஐகோர்ட் உத்தரவிட்டிருந்தது.
மும்பை கோர்ட்டின் தீர்ப்பை எதிர்த்து மகாராஷ்டிர அரசு சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்நிலையில் இவ்வழக்கை இன்று விசாரித்த சுப்ரீம் கோர்ட் ஒருவர் போலி சாதி சான்றிதழ் கொடுத்து அரசு பணி பெற்றிருந்தாலோ அல்லது பட்டம் பெற்றிருந்தாலோ அவர்களின் பதவியை உடனடியாகப் பறிக்கலாம் என அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.