நிலம் கையகப்படுத்தும் பிரச்சினை தொடர்ந்தால் Bullet Train திட்டம் என்னவாகும்?
புல்லட் ரயில் திட்டத்திற்கான நிலம் கையகப்படுத்துதல் மட்டும் பிரச்சனையல்ல, அத்துடன் தொடர்புடைய பிரச்சனைகளையும் ரயில்வே வாரியம் எதிர்கொள்கிறது.
மும்பை மற்றும் அகமதாபாத் இடையே 508 கி.மீ நீளமுள்ள அதிவேக ரயில் சேவை இந்திய ரயில்வேயின் லட்சியத் திட்டங்களில் ஒன்று. இந்தத் திட்டம் 2024ஆம் ஆண்டுக்குள் நிறைவு செய்ய வேண்டும் என்று ரயில்வே வாரியம் இலக்கு நிர்ணயித்திருக்கிறது.
இந்தியாவில் புல்லட் ரயில் தொடர்பான அண்மைத் தகவலை ரயில்வே வெளியிட்டது. அதன்படி, புல்லட் ரயில் திட்டத்திற்கான நிலம் கையகப்படுத்தும் திட்டம் செயல்படுத்தப்பட்டிருக்கிறது.
ஆனால் அது குறிப்பிட்ட காலத்திற்குள் முடியாவிட்டால், நாட்டின் முதல் புல்லட் ரயில் இரண்டு கட்டங்களாக செயல்படுத்தப்படும் என்று ரயில்வே வாரியம் தெரிவித்திருக்கிறது. புல்லட் ரயில் திட்டத்திற்கான நிலம் கையகப்படுத்துதல் மட்டும் பிரச்சனையல்ல, அத்துடன் அது தொடர்புடைய பிரச்சனைகளையும் ரயில்வே வாரியம் எதிர்கொள்கிறது.
முதல் கட்டமாக புல்லட் ரயில் சேவை, அகமதாபாத்தில் (Ahmedabad) இருந்து வாபி (Vapi) வரை இயக்கும் வகையில் பணிகள் நடைபெற்று வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த இரு இடங்களுக்கிடையில் 325 கி.மீ தொலைவுக்கு பாதை உருவாக்கப்படுகிறது.
இரண்டாம் கட்டத்தில் வாபியில் (Vapi) இருந்து பாந்த்ரா (Bandra) வரை புல்லட் ரயில் இயக்கப்படும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
புல்லட் ரயில் திட்டம், இந்தியாவில் இது வரை இல்லாத அளவில், மிகப்பெரிய கட்டுமான பணிக்கான ஒப்பந்தம் ஆகும். இதன் மூலம் பெறிய அளவில் வேலை வாய்ப்புகள் உருவாவதோடு, பொருளாதார நடவடிக்கைகள் வேகம் பெறும் எனவும் மிகப்பெரிய எதிர்பார்ப்பு நிலவுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
ALSO READ | உடல் தகனத்திற்கு பசு வரட்டியை பயன்படுத்த தெற்கு தில்லி மாநகராட்சி ஒப்புதல்
தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR