இனி ரயிலில் கூடுதல் லக்கேஜ் எடுத்துச் சென்றால் 6 மடங்கு அபராதம்!!
ரயில்களில் அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிகமான லக்கேஜ் எடுத்துச் சென்றால் 6 மடங்கு அபராதம் -மத்திய ரயில்வே அமைச்சகம்!!
ரயில்களில் அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிகமான லக்கேஜ் எடுத்துச் சென்றால் 6 மடங்கு அபராதம் -மத்திய ரயில்வே அமைச்சகம்!!
பயணிகள் தாங்களுடன் கொண்டு வரும் உடைமைகளை கணக்கிட்டு, ரயில்வே நிர்வாகம் கெடுபிடிகள் காட்டப்படுவதில்லை என்பதால், அதிக அளவு லக்கேஜ்களை பயணிகள் கொண்டு வருவதாகவும், இதனால் பல நேரங்களில் சக பயணிகள் புகார் தெரிவிக்கும் சூழல் ஏற்படுவதாகவும் ரயில்வே அதிகாரிகள் தரப்பில் குற்றங்கள் எழுந்துள்ளது.
விமானங்களில் பயணிகள் கொண்டு வரும் கூடுதல் லக்கேஜ்களுக்கு கட்டணம் வசூலிப்பது போல், ரயில் பயணிகளும் இனி கொண்டு செல்லும் கூடுதல் லக்கேஜ்களுக்கு கூடுதல் கட்டணத்துடன் அபராதமும் கட்ட வேண்டிய நிலை ஏற்பட உள்ளதாக ரயில்வே வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றனர்.
இனி ரயில்களில் அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிகமான லக்கேஜ் எடுத்துச் சென்றால் 6 மடங்கு அபராதம் மற்றும் இருக்கைக்கு ஏற்ப அதிகபட்சம் 70 கிலோ வரை கட்டணமின்றி எடுத்துச் செல்லலாம் என மத்திய ரயில்வே அமைச்சகம் தெரிவித்துள்ளது!
அனைத்து பகுதிகளிலும் சிறப்பு நடவடிக்கைகள் மூலம் இந்த விதிகளை அமல்படுத்த ரயில்வே நிர்வாகம் பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது. ரயில்வே விதிப்படி, முதல் வகுப்பு ஏசி பெட்டியில் பயணிக்கும் பயணி, 70 கிலோ வரை கட்டணம் இல்லாமலும், அதிகபட்சமாக 150 கிலோ வரை மட்டும் எடுத்துச் செல்ல அனுமதிக்கப்படுவர். ஏசி. இரண்டடுக்கு பெட்டியில், 50 கிலோ வரை கட்டணம் இன்றியும் அதிகபட்சமாக 100 கிலோ வரையிலான உடமைகளையும் எடுத்து செல்லலாம்.
இதையடுத்து, படுக்கை வசதி மற்றும் இரண்டாம் வகுப்பு பெட்டியில் பயணிக்கும் பயணிகள், முறையே, 40 கிலோ, 35 கிலோ வரை எடுத்து செல்லலாம். அதிகபட்சமாக 80 கிலோ மற்றும் 70 கிலோ வரை எடுத்து செல்ல அனுமதி!