ராஜ்யசபா எம்.பி ஆனார் இளையராஜா - மத்திய அரசு கொடுத்த பரிசு
ராஜ்யசபா எம்.பி ஆனார் இளையராஜா - மத்திய அரசு கொடுத்த பரிசு
தமிழ் திரையிசையின் அடையாளத்தை மாற்றியவர் இளையராஜா. 1000க்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்திருக்கும் இளையராஜா பொதுவாக அரசியல் விவகாரங்களில் தலையிடாதவர்.
அவர் சமீபத்தில் மோடியையும், அம்பேத்கரையும் ஒப்பிட்டு பேசியிருந்தார். இதனையடுத்து அந்த விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. ஒருதரப்பினர் மோடியையும், அம்பேத்கரையும் எப்படி ஒப்பிடலாம் என பேச, இளையராஜாவுக்கு கருத்து சொல்ல சுதந்திரம் இல்லையா என மறுதரப்பினர் கேள்வி எழுப்பினர்.
மேலும் தனது கருத்திலிருந்து எப்போதும் பின்வாங்கப்போவதில்லை என இளையராஜா கூறியதாக அவரது சகோதரர் கங்கை அமரன் தெரிவிதிருந்தார்.
இந்நிலையில், இசைஞானி இளையராஜா மாநிலங்களவை நியமன எம்.பியாக நியமிக்கப்பட்டுள்ளார். இதுதொடர்பாக பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில், சாதாரண பின்னணியில் இருந்து வந்த இளையராஜா பல சாதனைகளை படைத்துள்ளார்.
மனித உணர்வுகளை இசையின் வாயிலாக பிரதிபலித்தவர் இளையராஜா. அவரை மாநிலங்களவை எம்.பியாக நியமிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்” என குறிப்பிட்டுள்ளார். அதேபோல் தமிழகத்தைச் சேர்ந்த தடகள வீராங்கனையான பி.டி.உஷாவும் ராஜ்ய சபா எம்.பியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
இளையராஜா எம்.பியாக நியமனம் செய்யப்பட்டதை அடுத்து அவருக்கு பலரும் தங்களது வாழ்த்துகளை தெரிவித்துவருகின்றனர். அதேசமயம், மோடியை புகழ்ந்ததற்காக இளையராஜாவுக்கு இந்தப் பரிசு கிடைக்கும் என்பது ஏற்கனவே எதிர்பார்க்கப்பட்ட ஒன்றுதான் எனவும் கூறிவருகின்றனர்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR