காஷ்மீர் உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளுக்கு தீர்வு காண பேச்சுவார்த்தை நடத்த முன்வரவேண்டும் என பிரதமர் மோடிக்கு பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் கடிதம்!!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் பா.ஜ.க தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று இரண்டாவது முறையாக  பிரதமர் மோடி பிரதமராக பதவியேற்றார். இந்நிலையில், பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான், இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியுள்ள தகவல் வெளியாகியுள்ளது. அதில் இரு நாடுகளும் வறுமையை ஒழிப்பதற்கும், பிராந்திய அபிவிருத்திக்கும் ஒன்றாக இணைந்து பணியாற்றுவது முக்கியம் எனவே காஷ்மீர் பிரச்சனை உட்பட அனைத்து பிரச்சினைகளுக்கும் தீர்வு காண இரு நாடுகளுக்கிடையே பேச்சுவார்த்தைகள் மூலம் தீர்த்து கொள்ள பாகிஸ்தான் விரும்புவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். 


இது தொடர்பாக பாகிஸ்தான் ஊடகங்கள் வெளியிட்டுள்ள செய்தியில், இரண்டாம் முறையாக பிரதமர் பொறுப்பேற்றிருக்கும் மோடிக்கு வாழ்த்து தெரிவித்து இம்ரான்கான் எழுதியுள்ள கடிதத்தில், இரு தரப்புக்கும் இடையே நிலவும் பல்வேறு பிரச்னைகள் குறித்து பேசுவதற்கு தயாராக இருப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.


குறிப்பாக காஷ்மீர் மற்றும் எல்லை தாண்டிய பயங்கரவாதம் குறித்து பேசவும் தாம் தயார் என இம்ரான் கான் குறிப்பிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. கிர்கிஸ்தானில் அடுத்த வாரம் நடக்க இருக்கும் ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் இருநாட்டு தலைவர்களும் சந்தித்துப் பேச வாய்ப்புள்ளதாக கூறப்பட்ட நிலையில், அதுபோன்ற திட்டம் எதுவுமில்லை என மத்திய அரசு கூறியுள்ளது.