அசாமின் நாகானில் உள்ள தேயிலைத் தோட்டத்தில் 16 அடி நீள பிரமாண்டமான ராஜா நாகப்பாம்பு கண்டுபிடிக்கப்பட்டபோது அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. மிகப்பெரிய ராஜா நாகம் சனிக்கிழமை இரவு நாகானில் உள்ள தேயிலை தோட்டத்தில் காணப்பட்டது. மக்கள் உடனேயே வனத்துறைக்கு தகவல் கொடுத்தனர். வனத்துறையின் பாம்பு பிடிக்கும் நிபுணர் குழு சம்பவ இடத்தை அடைந்து ராஜ நாகத்தை மீட்கும் பணியைத் தொடங்கியது. இருப்பினும், நீண்ட நேர முயற்சிக்குப் பிறகு, கிங் கோப்ரா (King Cobra) எனப்படும் ராஜ நாகம் பாதுகாப்பாக பிடிபட்டார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்த பெரிய ராஜ நாகத்தை பிடிப்பதில் வனத்துறையின் பாம்பு நிபுணர் சிரமங்களை எதிர்கொண்டார். நாகத்தின் எடை சுமார் 20 கிலோ என்று கூறப்படுகிறது. பாம்பு பிடிக்கும் நிபுணர்கள் ராஜ நாகப்பாம்பைப் பிடிக்க முயன்றபோது, ​​கையில் அகப்படாமல், அங்கும் இங்கும் ஊர்ந்து சென்றது. 


நாகோனின் தேயிலைத் தோட்டத்தில் ராஜா நாகம் தரையில் கிடந்தது. மக்கள் ராஜ நாகப்பாம்பைப் பார்த்து பதற்றமடைந்தனர். உடனே மக்கள் வனத்துறை குழுவிடம் தெரிவித்தனர்.



கிங் கோப்ரா மிக நீண்ட முயற்சிக்கு பிறகு பிடிக்கப்பட்டது. பாம்பு நிபுணர் ராஜ நாகப்பாம்பைப் பிடித்து காட்டுக்குள் விடுவித்தார். அஸ்ஸாமின் காடுகளில் ஏராளமான ராஜா நாகங்கள் உள்ளன. கிங் கோப்ரா எனப்படும் ராஜ நாக பாம்பு வெள்ளத்தின் போது, சில சமயங்களில் வெளியே வருகிறது என அங்குள்ள மக்கள் கூறுகின்றனர்.


ALSO READ | உத்திராகண்டில் வேகமாக பரவும் காட்டுத் தீயை அணைக்க போராடும் NDRF, தீயணைப்பு படை 


தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR