அசாமில் வெள்ளம்: கிராமங்கள் மூழ்கின
அசாமில் பிரம்மபுத்திரா உள்ளிட்ட முக்கிய நதிகளில் பெரும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் சுமார் 100 கிராமங்கள் நீரில் மூழ்கி உள்ளன. கடும் வெள்ளப் பெருக்கு காரணமாக சுமார் 7 மாவட்டங்களைச் சேர்ந்த 88,000 க்கும் மேற்பட்ட மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். வெள்ளத்தால் 6 லட்சம் ஹெக்டேருக்கும் அதிகமான விளை நிலங்கள்
நீரில் மூழ்கி உள்ளன. வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள லகிம்பூர் மாவட்டத்தில் மட்டும் 7 நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன.
வெள்ளம் மட்டுமின்றி, தொடர் கனமழை காரணமாக பல இடங்களில் மண் அரிப்பும் ஏற்பட்டுள்ளது. படகுகள் மூலம் வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் இருந்து மக்கள், பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டு வருகின்றனர்.