இன்றைய இளைஞர்கள், மன வலிமை இல்லாமல் இருப்பது உண்மையிலே கவலை அளிக்கும் விஷயமாகத் தான் உள்ளது. எந்த விதமான மனவருத்தத்தையும், துக்கத்தையும் தாங்கிக் கொள்ள முடியாத மன நிலையில் சில இளைஞர்கள் இருக்கின்றனர்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ராய்கர்: சத்தீஸ்கரின் (Chattisgarh) ராய்கர் மாவட்டத்தில் உள்ள தனது வீட்டில் தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்படும் 21 வயது பெண் தனது செல்ல நாய் மரணம் காரணமாக மனம் உடைந்து தற்கொலை செய்து கொண்டதாக போலீசார் வியாழக்கிழமை தெரிவித்தனர்.


கோத்ரா சாலை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கோர்கா வட்டாரத்தில் உள்ள தனது வீட்டின் கூரையில் இரும்புக் குழாயில் தொங்கிய நிலையில் முதுகலை படிக்கும் மாணவி பிரியான்ஷு சிங் புதன்கிழமை காலை கண்டெடுக்கப்பட்டதாக கோத்ரா சாலை காவல் நிலைய ஸ்டேஷன் ஹவுஸ் அதிகாரி (SHO) சாமன் சின்ஹா தெரிவித்தார்.


செவ்வாய்க்கிழமை இரவு நோய்வாய்ப்பட்டு இறந்த தனது நான்கு வயது நாய் மரணம் குறித்து சிங் மிகவும் மனம் வருந்தியதாக அந்த அதிகாரி தெரிவித்தார்.


மறுநாள் அந்த செல்ல நாய் அடக்கம் செய்யப்படுவதற்கு முன்னதாக, அந்த பெண்ணின் குடும்பத்தினர் இந்த மாணவி தூக்கில் தொங்கிக் கொண்டிருப்பதைக் கண்டனர்.


அந்தப் பெண்ணால் எழுதப்பட்டதாகக் கூறப்படும் தற்கொலைக் குறிப்பு, சம்பவ இடத்திலிருந்து மீட்கப்பட்டது, அதில் தான் தகனம் செய்யப்படுவதற்குப் பதிலாக தனது செல்லப்பிராணியுடன் அடக்கம் செய்யப்பட வேண்டும் என்று அவர் எழுதியிருந்தார் என்று காவல் துறை அதிகாரி தெரிவித்தார்


இது தொடர்பாக காவல் துறை வழக்கு பதிவு செய்துள்ளது, மேலும் விசாரணை நடைபெற்று வருகிறது.


ALSO READ | 1995 ஆண்டு மர்மம் இனியாவது தீருமா.... இளவரசி டயானா குறித்த ரகசியங்கள் என்ன..!!! 


தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR