புதுடெல்லி: ஹத்ராஸ் கும்பல் வழக்குக்கு ஒரு புதிய திருப்பத்தில், குற்றம் சாட்டப்பட்டவர்களில் ஒருவரான சந்தீப் சிங்குடன்,  தலித் குடும்பத்தினர் தொடர்ந்து தொலைபேசியின் தொடர்பு கொண்டிருந்ததாக உத்தரபிரதேச போலீஸ் விசாரணையில் கண்டறியப்பட்டுள்ளது. 19 வயது பெண்ணை கும்பல் பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் முக்கியமாக குற்றம்சாட்டப்பட்டுள்ளவர் தான் அந்த சந்தீப் சிங்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சந்தீப்புக்கும் பாதிக்கப்பட்டவரின் குடும்பத்திற்கும் இடையே 2019 அக்டோபர் 13ம் தேதி முதல் தொலைபேசி உரையாடல் தொடங்கியிருப்பதாக உ.பி. போலீஸ் விசாரணையில் கண்டறியப்பட்டுள்ளது. சந்தீப் மற்றும் பாதிக்கப்பட்ட குடும்பத்தினரின் தொலைபேசி எண்களுக்கு இடையே மொத்தம் 104 தொலைபேசி அழைப்புகள் செய்யப்பட்டன என்பது போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. 


உத்தரப்பிரதேசத்தின் ஹத்ராஸில் இளம் தலித் பெண் நான்கு உயர் சாதி ஆண்கள் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கியதாக கூறப்படுகிறது. பாலியல் பலாத்கார முயற்சியை எதிர்த்ததால் குற்றம் சாட்டப்பட்டவர் மிக கொடூரமாக தாக்கப்பட்டார். அவர் கடந்த வாரம் டெல்லி மருத்துவமனையில் உயிர் இழந்தார்.


குற்றம் சாட்டப்பட்ட 4 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.


பலியானவரின் சடலம் கடந்த புதன்கிழமை அதிகாலை 3 மணியளவில் தகனம் செய்யப்பட்டது. போலீஸார் இறுதி சடங்கை இரவிலேயே நடத்த கட்டாயப்படுத்தினர் என பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் குற்றம் சாட்டினர். ஆனால், அசாதாரண சூழ்நிலையை கருத்தில் கொண்டே, இந்த குடிவு எடுக்கப்பட்டதாக, உத்திர பிரதேச அரசு நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. 


ALSO READ | Hathras Case: அமெரிக்க பாணியில் உ.பி.யை எரிக்க வெளிநாட்டு சதி.. சிக்கியது ஆதாரம்..!!


இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் சீற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.


இதற்கிடையில், அலிகார் முஸ்லீம் பல்கலைக்கழகத்தின், ஜவஹர்லால் நேரு மருத்துவக் கல்லூரியில் தடயவியல் மருத்துவத் துறை, ஹத்ராஸ் வழக்கில் பாதிக்கப்பட்ட 19 வயது தலித் வழக்கில் “கற்பழிப்புக்கான எந்த ஆதாரமும் இல்லை” என்று கூறியுள்ளது குறிப்பட்டுள்ளது.


இது தொடர்பான சான்றிதழை, உத்தரபிரதேச அரசு நேற்று உச்சநீதிமன்றத்தில் அளித்த வாக்குமூலத்துடன் சமர்ப்பிக்கப்பத்தது.


ALSO READ | Hathras வழக்கில் கலவரத்தை தூண்ட எதிர் கட்சிகள் முயற்சி: யோகி ஆதித்யநாத்


“வளர்ச்சியை விரும்பாதவர்கள், இன மற்றும் வகுப்புவாத கலவரங்களைத் தூண்ட விரும்புகிறார்கள். இந்த கலவரங்களின் போர்வையில், அவர்கள் அரசியல் அரசியல் ஆதாயம் தேட, தொடர்ந்து சதி செய்கிறார்கள்,” என்று முன்னதாக முதல்வர் யோகி ஆதித்யநாத் கூறினார்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYe