ஹத்ராஸ் வழக்கில் (Hathras case) இன மற்றும் வகுப்புவாத கலவரங்களைத் தூண்ட எதிர்க்கட்சி விரும்புகிறது என்று முதல்வர் யோகி (Yogi Adityanath) கூறுகிறார். போலீஸார் பொறுப்புடன் செயல்பட வேண்டும் என உத்தரவு பிறப்பித்துள்ளார்.
"மிகப்பெரிய பிரச்சினைகளையும் பேசி தீர்க்க முடியும். இது 'புதிய உத்தரபிரதேசம்' பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கான ஒரே வழி பேச்சூ வார்த்தை. பெண்கள் மற்றும் பட்டியல் இனத்தனவர் தொடர்புடைய வழக்குகளை கையாள்வதில் மாநில காவல்துறை இன்னும் திறமையாக பொறுப்புணர்வுடன் செயல்பட வேண்டும் என" ,உ.பி. முதல்வர் யோகி ஆதிதயநாத் கூறினார்
“வளர்ச்சியை விரும்பாதவர்கள், இன மற்றும் வகுப்புவாத கலவரங்களைத் தூண்ட விரும்புகிறார்கள். இந்த கலவரங்களின் போர்வையில், அவர்கள் அரசியல் அரசியல் ஆதாயம் தேட, தொடர்ந்து சதி செய்கிறார்கள்,” என்று ஆதித்யநாத் கூறினார்.
ALSO READ | Hathras Case: உ.பி. பெண்ணிற்கு நீதி கோரி கனிமொழி தலைமையில் Candle Light March!!
இந்த வழக்கை காவல்துறை சரியாக கையாளவில்லை என யோகி ஆதித்யநாத் தலைமையிலான அரசாங்கம் கடந்த சில நாட்களாக எதிர்ப்பை சந்தித்து குறிப்பிடத்தக்கது. இது நாடு முழுவதும் போராட்டத்தை தூண்டியுள்ளது. பாதிக்கப்பட்டவரின் உறவினர்கள் மற்றும் எதிர்க்கட்சிகள் மாவட்ட ஆட்சியரை இடைநீக்கம் செய்யக் கோரியுள்ளன.
19 வயதான தலித் பெண்ணை, செப்டம்பர் 14 ஆம் தேதி ஹத்ராஸில் உள்ள ஒரு கிராமத்தில் நான்கு ஆண்கள் பாலியல் பலாத்காரம் செய்ததாகக் கூறப்படுகிறது. அவரது உடல்நிலை மோசமடைந்த பின்னர், அவர் டெல்லியின் சப்தர்ஜங் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டார், அங்கு அவர் கடந்த வாரம் உயிரிழந்தார்.
புதன்கிழமை அதிகாலையில் அவர் தகனம் செய்யப்பட்டார். உள்ளூர் போலீஸார், இரவு இறந்தவரின் இறுதி சடங்குகளை நடத்துமாறு கட்டாயப்படுத்தினர் என்று அவரது குடும்பத்தினர் குற்றம் சாட்டினர். இருப்பினும், உள்ளூர் காவல்துறை அதிகாரிகள் "குடும்பத்தின் விருப்பப்படி" தகனம் மேற்கொள்ளப்பட்டதாகக் கூறினர்.
ALSO READ: Hathras Case: தலித் பெண் பாலியல் வன்கொடுமை வழக்கை CBI விசாரிக்க CM யோகி உத்தரவு!!
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYe