குளிர்காலம் தொடங்கியவுடன், மத்திய மற்றும் வடக்கு ஆசியாவிலிருந்து ஆயிரக்கணக்கான புலம்பெயர்ந்த பறவைகள் பாங் ஏரிக்கு வரத் தொடங்குகின்றன.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இமாச்சலப் பிரதேசத்தின் பாங் அணையில் புலம்பெயர்ந்த சுமார் 1,200 அரிய வகை பறவைகள் மர்மமான முறையில் இறந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


இமாச்சலப் பிரதேசத்தின் (Himachal Pradesh) பாங் அணையில், புலம் பெயர்ந்த பறவைகளின் இறப்பு எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதை அடுத்து, அந்த பகுதிக்கும் உள்ளூர் மக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் வர தடைவிதிக்கப்பட்டுள்ளது. 


இறப்புக்கான காரணம் இன்னும் ஒரு மர்மமாகவே உள்ளது. காரணத்தை கண்டறிய, பறவைகளின் உடல்கள் வெவ்வேறு ஆய்வகங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளன. ஆனால் ஆய்வு முடிவுகளைப் பெற நாட்கள் அல்லது குறைந்தது ஒரு வாரம் ஆகலாம்.


சர்வதேச அளவில் பிரபலமாக உள்ள பாங் அணை ஈரநிலத்தில் 100 க்கும் மேற்பட்ட அரிய இனங்களை சேர்ந்த 1 லட்சத்துக்கும் மேற்பட்ட புலம்பெயர்ந்த பறவைகள் குளிர் காலத்தில் வருகின்றன, அவை ஒவ்வொரு ஆண்டும் குளிர்காலத்தில் இமயமலைப் பகுதி மற்றும் மத்திய ஆசியாவிலிருந்து (Central Asia)  ஆயிரக்கணக்கான கிலோமீட்டர் தொலைவில் இருந்து வருகின்றன.


1960 ஆம் ஆண்டில் பியாஸ் நதிக்கரையில் கட்டப்பட்ட பாங் அணை ஏரி, 1983 ஆம் ஆண்டில் ஒரு பறவைகள் சரணாலயமாக அறிவிக்கப்பட்டு 1994 ஆம் ஆண்டில் தேசிய முக்கியத்துவம் வாய்ந்த ஈரநிலம் என்ற அந்தஸ்தைக் பெற்றது


கடந்த ஆண்டு, 114 இனங்கள் கொண்ட 1.15 லட்சம் பறவைகள்  இந்த அணைக்கு வந்தன. டிசம்பர் 15 ஆம் தேதி நடத்தப்பட்ட கணக்கெடுப்பில் 57,000 புலம்பெயர்ந்த பறவைகள் இருந்ததாக பதிவு செய்யப்பட்டுள்ளன. 15 நாட்களுக்கு ஒருமுறை பறவைகளின் கணக்கெடுப்பு நடத்தப்படுகிறது


ALSO READ | 2020 ட்ரைலர் தான்... மெயின் பிக்சர் இனிமேல் தான் என்கிறார் Nostradamus..!!


தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR