BrahMos சூப்பர்சோனிக் ஏவுகணை வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டது
இந்திய கடற்படை கப்பலான ஐஎன்எஸ் விசாகப்பட்டினத்தில் (INS Vishakhapatnam) இருந்து பிரம்மோஸ் சூப்பர்சோனிக் ஏவுகணையை இந்தியா இன்று வெற்றிகரமாகச் பரிசோதனை செய்தது.
புது தில்லி: இந்திய கடற்படை கப்பலான ஐஎன்எஸ் விசாகப்பட்டினத்தில் (INS Vishakhapatnam) இருந்து பிரம்மோஸ் சூப்பர்சோனிக் ஏவுகணையை இந்தியா இன்று வெற்றிகரமாகச் பரிசோதனை செய்தது. ஏவுகணை துல்லியமாக ஒரு கப்பலை குறிவைத்து அழித்தது. ஜனவரி 12 ஆம் தேதி, இந்தியா மற்றும் சீனா இடையே 14 வது சுற்று பேச்சுவார்த்தையில் பதற்றத்தை குறைப்பது குறித்து பேசப்படும் நிலையில், இந்த ஏவுகணை பரிசோதனை நடைபெற்றுள்ளது.
முன்னதாக, டிசம்பர் 8 ஆம் தேதி, வான் எல்லையை தாக்கவல்ல சூப்பர்சோனிக் ஏவுகணை பிரம்மோஸ் ஒடிசா கடற்கரையில் உள்ள ஒருங்கிணைந்த சோதனைத் தளத்தில் இருந்து வெற்றிகரமாகச் சோதனை செய்யப்பட்டது. இந்த பரிசோதனை பிரம்மோஸ் ஏவுகனை மேம்பாட்டில் ஒரு மைல்கல் என்று வர்ணிக்கப்படுகிறது. சுகோய் 30 Mk-I என்ற சூப்பர்சோனிக் போர் விமானத்தில் இருந்து வானிலிருந்து தாக்க வல்ல ஏவுகணை சோதனை செய்யப்பட்டதாக ஆதாரங்கள் தெரிவித்தன.
பிரம்மோஸ் ஏவுகணையின் சிறப்பு அம்சங்கள்
பிரம்மோஸ் ஏவுகணை ரஷ்யா மற்றும் இந்தியாவின் கூட்டு திட்டமாக தயாரிக்கப்பட்டது. பிரம்மோஸ் ஏவுகணை துல்லியமாக இலக்கை சென்று தாக்குதல் பெயர் பெற்றது. சூப்பர்சோனிக் க்ரூஸ் ஏவுகணைகள் மிக வேகமாக தாக்கும். இந்த ஏவுகணையை நீர்மூழ்கிக் கப்பல், கப்பல் அல்லது விமானத்தில் இருந்து ஏவலாம். பிரம்மோஸின் வரம்பையும் அதிகரிக்கலாம். இது தவிர எதிரிகளின் ரேடாரில் இருந்து தப்பிக்கும் திறன் கொண்டது.
ALSO READ | வடகொரியாவில் மீண்டும் ஏவுகணை சோதனை; எச்சரிக்கும் உலக நாடுகள்!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.
Android Link: https://bit.ly/3hDyh4G
Apple Link: https://apple.co/3loQYeR