ஸ்ரீநகர்: ஜம்மு-காஷ்மீரில், அமைதியை மீண்டும் நிலை நாட்ட பயங்கரவாதிகளை ஒழிப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பயங்கரவாத அமைப்புகளை ஒழிப்பதில் இந்திய ராணுவம், பாதுகாப்புப் படையினர் மற்றும் ஜம்மு காஷ்மீர் காவல்துறை ஈடுபட்டுள்ளன. இதுதொடர்பாக, இதுவரை கடந்த 72 மணி நேரத்தில் 4 இடங்களில் நடந்த வெவ்வேறு மோதல்களில்  12 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அண்மையில் நடந்த தாக்குதலில் கொல்லப்பட்ட பயங்கரவாதிகள் குறித்து பேசுகையில், திரால் மற்றும் ஷோபியான் பகுதிகளில் 7 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டுள்ளனர். ஹரிபோராவில், அல் பதர் (Al Badr)) என்ற பயங்கரவாத அமைப்பின் மூன்று பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். அதே நேரத்தில், பிஜ்பெஹ்ராவில் லஷ்கர்-இ-தைபா (LeT) அமைப்பை சேர்ந்த பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.


ஜம்மு-காஷ்மீர் (Jammu and Kashmir) காவல்துறை டிஜி தில்பாக் சிங், பிஜ்பெஹாராவில் என்கவுன்டர் முடிவுக்கு வந்துள்ளது என்றார். தெற்கு காஷ்மீரில் அனந்த்நாக் மாவட்டத்தின் பிஜ்பெஹ்ரா பகுதியில் உள்ள செம்தானில் நடந்த மோதலில் லஷ்கர்-இ-தைபாவைச் சேர்ந்த இரண்டு தீவிரவாதிகள் கொல்லப்பட்டுள்ளனர். மொத்தத்தில், 12 பயங்கரவாதிகள் இந்தியப் படைகள் மற்றும் பாதுகாப்புப் படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டனர்.


ALSO READ | சட்டவிரோதமாக குடியேறிய ரோஹிங்கியாக்களை நாடு கடத்தலாம்: உச்ச நீதிமன்றம்


அண்மையில் நடந்த தாக்குதலில் கொல்லப்பட்ட பயங்கரவாதிகள் குறித்து பேசுகையில், திரால் மற்றும் ஷோபியான் பகுதிகளில் 7 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டுள்ளனர். ஹரிபோராவில், அல் பதர் (Al Badr)) என்ற பயங்கரவாத அமைப்பின் மூன்று பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். அதே நேரத்தில், பிஜ்பெஹ்ராவில் லஷ்கர்-இ-தைபா (LeT) அமைப்பை சேர்ந்த பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.


ஜம்மு-காஷ்மீர் காவல்துறை டிஜி தில்பாக் சிங், பிஜ்பெஹாராவில் என்கவுன்டர் முடிவுக்கு வந்துள்ளது என்றார். தெற்கு காஷ்மீரில் அனந்த்நாக் மாவட்டத்தின் பிஜ்பெஹ்ரா பகுதியில் உள்ள செம்தானில் நடந்த மோதலில் லஷ்கர்-இ-தைபாவைச் சேர்ந்த இரண்டு தீவிரவாதிகள் கொல்லப்பட்டுள்ளனர். மொத்தத்தில், 12 பயங்கரவாதிகள் இந்தியப் படைகள் மற்றும் பாதுகாப்புப் படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டனர்.


அண்மையில் பயங்கரவாத அமைப்பில் சேர்ந்த  இளைஞர்களை சரணடையுமாறு காவல்துறை மற்றும் பாதுகாப்புப் படையினர் வலியுறுத்தி வருவதாக காஷ்மீர்  காவல் துறை அதிகாரி தெரிவித்தார். சமீபத்தில், பயங்கரவாத பாதையில் சென்ற இந்த இளைஞர்களின் குடும்பங்களும் தங்கள் குழந்தைகளிடம் சரணடையுமாறு வேண்டுகோள் விடுத்துள்ளனர். ஆனால் சில பயங்கரவாதிகள் அவ்வாறு செய்வதைத் தடுக்கிறார்கள் எனவும் அவர் கூறினார்.


ALSO READ | கொரோனா கால சாதனை; அமேசான் இந்தியா மூலம் 300 கோடி டாலர் மதிப்பிலான ஏற்றுமதி


தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR