Watch Video: ஜம்முவில் 34 மணி நேரம் வெள்ளப்பெருக்கில் சிக்கித் தவித்த மக்களை மீட்டது IAF!!
ஜம்மு பிராந்தியத்தில் கடந்த மூன்று நாட்களாக தொடர்ந்து பெய்த மழையால் பெரிய ஆறுகள் மற்றும் நீரோடைகள் பொங்கி வழியும் நிலையில் உள்ளன.
ஜம்மு: கடந்த மூன்று நாட்களாக தொடர்ந்து பெய்த மழையால் பெரிய ஆறுகள் மற்றும் நீரோடைகள் பொங்கி வழியும் நிலையில் உள்ள ஜம்மு (Jammu) பிராந்தியத்தில் வெவ்வேறு நீர்நிலைகளில் மூழ்கும் நிலையில் இருந்த சுமார் 34 பேரை பாதுகாப்புப் படையினர் வியாழக்கிழமை விரைவாக செயல்பட்டு காப்பாற்றினர்.
கத்துவா மாவட்டத்தில் தலோட்டியைச் (Dhaloti) சேர்ந்த 7 பேர், பூஞ்ச் மாவட்டத்தின் குர்சாய் பகுதியைச் சேர்ந்த 8 பேர், கானேதர்-சலோத்ரி பகுதியில் நான்கு பேர், மேலும் ஜம்மு மாவட்டத்தில் சிக்கித் தவித்த 15 மினி பஸ் பயணிகள் ஆகியோர் பாதுகாப்பு படையினரால் மீட்கப்பட்டனர்.
கத்துவா மாவட்டத்தில் உஜ் ஆற்றின் (Ujh River) இரண்டு நீரோடைகளுக்கு இடையில் சிக்கி ஏறக்குறைய 34 மணி நேரத்திற்குப் பிறகு, ஒரு இந்திய விமானப்படை (IAF) ஹெலிகாப்டர் குறைந்தது 7 பேரை மீட்டது என்று ஜம்முவைச் சேர்ந்த ராணுவ பி.ஆர்.ஓ லெப்டினன்ட் கொலொனல் தேவேந்தர் ஆனந்த் தெரிவித்தார். ஏழு பொதுமக்கள் சிக்கியுள்ளதாக ஒரு செய்தி வந்ததைத் தொடர்ந்து, ஜம்முவில் உள்ள MI -17 ஹெலிகாப்டர் பிரிவின் இந்திய விமானப்படை ஹெலிகாப்டர் உடனடியாக அவர்களை மீட்பதற்காக பணியமர்த்தப்பட்டதாக அவர் கூறினார்.
"விங் கமாண்டர் முகுல் கரே மற்றும் படைத் தலைவர் வினய் படகி ஆகியோரால் வழிநடத்தப்பட்ட இந்த ஹெலிகாப்டர் மாலை 5.15 மணியளவில் அந்த இடத்தை அடைந்தது. ஹெலிகாப்டரை நிலைநிறுத்த குழுவினர் விரைவாக பொருத்தமான இடத்தைத் தேர்ந்தெடுத்தனர்" என்று லெப்டினண்ட் கொலனல் ஆனந்த் கூறினார்.
ALSO READ: வட இந்தியாவில் கனமழை பெய்ய வாய்ப்பு; இந்த மாநிலங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடுப்பு
இந்த நிவாரணப் பணி குறித்த தகவல்களை ஜம்மு பாதுகாப்புப் படையின் பி.ஆர்.ஓ ஒரு ட்வீட் மூலம் தெரிவித்தார்.
இரண்டு கருட் சிறப்புப் படை கமாண்டோக்கள் பின்னர் தீவில் இறங்கி, சிக்கித் தவித்த மக்களை அடைந்து, அவர்கள் ஹெலிகாப்டரில் ஏற உதவினர். மூன்று பெண்கள் மூன்று குழந்தைகள் உட்பட ஏழு பேர் உஜ் ஆற்றின் கரையோரத்தில் உள்ள ஒரு கிராமத்தின் அருகிலுள்ள மைதானத்திற்கு கொண்டு செல்லப்பட்டனர்.
"IAF விரைவாக செயல்பட்டு, இரவில் நீர் மட்டம் ஆபத்தான நிலைக்கு உயருமுன் அந்த சிக்கியவர்களை மீட்டது. ஜம்மு ஏர் பேஸ் குழுமத்தின் செயல்பாட்டுத் தலைவர் கேப்டன் சந்தீப் சிங் இந்த பணியை ஒருங்கிணைத்தார்," என்று செய்தித் தொடர்பாளர் கூறினார்.
இடைவிடாத மழையைத் தொடர்ந்து ஜம்மு பகுதி முழுவதும் அனைத்து பெரிய ஆறுகள் மற்றும் நீரோடைகளின் நீர் மட்டம் அபாய நிலையை எட்டி வருகிறது.
ALSO READ: தில்லியில் அபாய அளவை கிட்டத்தட்ட தொட்டுவிட்டது யமுனை நதி: வெள்ளம் வருமா?