சம்பள பாக்கி பிரச்சனை: iPhone தொழிற்சாலையை அடித்து நொறுக்கிய ஊழியர்கள்
கர்நாடக மாநில தலைநகர் பெங்களூரில் இருந்து 70 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள கோலார் மாவட்டத்தில் தைவான் நாட்டை சேர்ந்த விஸ்ட்ரான் நிறுவனத்தின் தொழிற்சாலை அமைந்துள்ளது.
கர்நாடக மாநில தலைநகர் பெங்களூரில் இருந்து 70 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள கோலார் மாவட்டத்தில் தைவான் நாட்டை சேர்ந்த விஸ்ட்ரான் நிறுவனத்தின் ( Wistron Corporation) தொழிற்சாலை அமைந்துள்ளது.
இந்த தொழிற்சாலையில் ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் தயாரிக்கப்பட்டு வருகிறது. ஐபோன் (iPhone) மட்டுமல்லாமல் லெனோவோ (Lenovo), மைக்ரோசாப்ட் (Microsoft), போன்ற வேறு சில முக்கிய தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு தேவையான உபகரணங்களும் தயாரிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், கர்நாடகாவில் (Karnataka) உள்ள விஸ்ட்ரான் நிறுவனம் தனது ஊழியர்களுக்கு பல மாதங்களாக சம்பளம் வழங்கப்படவில்லை என கூறப்படுகிறது.
சம்பளம் கொடுக்காமல் இருப்பதோடு மட்டுமல்லாமல் ஊழியர்கள் வழக்கமான 8 மணி நேரத்தை விட கூடுதலாக 12 மணிநேரம் வேலைபார்க்க வேண்டும் என நிர்பந்திக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
வேலைக்கு சேரும்போது கொடுப்பதாக கூறிய தொகையை விட குறைவான சம்பளம் கொடுப்பதாவும் சில ஊழியர்கள் அந்நிறுவனம் மீது குற்றம் சாட்டியுள்ளனர். இந்த பிரச்சனைகளை தீர்த்து வைக்க தொழிற்சங்கங்களுக்கும் விஸ்ட்ரான் நிறுவனத்திற்கும் இடையில் நடந்த பலகட்ட பேச்சுவார்த்தையும் தோல்வி அடைந்தன.
இந்நிலையில், சம்பள பாக்கி பிரச்சனை, அதிக வேலைப்பழு போன்ற பல்வேறு பிரச்சனைகளால் மன உழைச்சலுக்கு ஆளான, ஊழியர்கள், இன்று காலை திடீரென போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தின் போது விஸ்ட்ரான் நிறுவனத்தினுள், அதிரடியாக நுழைந்த ஊழியர்கள் தங்கள் கண்ணில் பட்டவற்றையெல்லாம் அடித்து நொறுக்கினர்.
நிறுவனத்தின் உள்ளே இருந்த கம்ப்யூட்டர், கண்ணாடி கதவுகள், டிவி உள்பட அனைத்தையும் ஊழியர்கள் அடித்து சேதப்படுத்தினர். நிறுவனத்தின் வாகனங்களுக்கும் தீவைத்து கொளுத்தினர்.
இது குறித்த தகவல் கிடைத்தவுடன் சம்பவ இடத்திற்கு போலீஸார் விரைந்தனர். தீயணைப்பு துறையினர் அழைக்கப்பட்டு நிறுவனத்தில் பற்றி எரிந்த தீயை அணைக்கப்பட்டது. தொழிற்சாலையில் நடந்த வன்முறை தொடர்பாக போலீஸார் போராட்டக்கரார்களுக்கு எதிராக வழக்குப்பதிவு செய்தனர். மேலும், விஸ்ட்ரான் நிறுவனத்தை சேர்ந்த 100-க்கும் அதிகமானோரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ALSO READ | Good News: 8 மாதங்களில் 60 கோடி கொரோனா தடுப்பூசி வழங்க தயாராகிறது இந்தியா
தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR