உலகெங்கிலும் கொரோனா வைரஸுக்கான தடுப்பூசிக்காக மக்கள் ஆவலுடன் எதிர்ப்பார்த்து காத்திருக்கிறார்கள். அவசர கால பயன்பாட்டிற்கு அனுமதி அளிக்கப்பட்டதை தொடர்ந்து பிரிட்டன் ரஷ்யாவில் தாடுப்பூசி போடும் பணி தொடங்கப்பட்டுவிட்டது.
இந்தியாவிலும் அவசர கால பயன்பாட்டிற்கு அனுமதி கோரி, மருந்து நிறுவனங்கள் இந்திய மருந்து கட்டுபாட்டு ஆணையத்திடம் விண்ணப்பித்துள்ளன. இதற்கான ஒப்புதல் விரைவில் கிடைக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் இந்தியாவில் அடுத்த ஆறு முதல் எட்டு மாதங்களில் 60 கோடி கொரோனா தடுப்பூசிகளை (Corona Vaccine) வழங்க முடிவு செய்துளளதாக தடுப்பூசி நிர்வாகத்தின் நிபுணர்களின் குழுவின் தலைவரான வி.கே.பால் தெரிவித்துள்ளார்.
மேலும் இந்த தடுப்பூசிகளை பாதுகாக்க குளிர் சாதன சேமிப்பு அமைப்புகளை ஏற்படுத்த அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. கொரோனா தடுப்பூசிகளை சேமித்து வைக்க 2 முதல் 8 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையுடன் கூடிய குளிர் சாதன அமைப்பு தேவை. சீரம் (Serum), பாரத் பயோடெக், சைடஸ் (Zydus), ஸ்பீட்னிக் (Sputnik) ஆகிய நிறுவனங்கள் தயாரிக்கும் கொரோனா தடுப்பூசிக்கு சாதாரண குளிர் சாதன சேமிப்பு நிலையே போதுமானது. ஆனால், பைசர் தயாரிக்கும் கொரோனா தடுப்பூசியை சேமிக்க மைன்ஸ் 70 டிகிரி தட்ப நிலை தேவை. எனவே இதனை மனதில் கொண்டு அதற்கு ஏற்ப குளிர்சாதன சேமிப்பு வசதிகள் ஏற்படுத்தப்படும் என அவர் மேலும் கூறினார்.
இதற்கிடையில், இந்தியாவில் (India) கொரோனா தொற்று ஆக்டிவ் நோயாளிகளின் எண்ணிக்கை குறைந்து வருவதாக, சுகாதார அமைச்சகம் மேலும் நல்ல செய்தியை வெளியிட்டுள்ளது.
ஆக்டிவ் நோயாளிகளின் எண்ணிக்கை 3.6 லட்சமாக குறைந்துள்ளதாக அமைச்சகம் கூறியுள்ளது. தற்போது இந்தியாவில் உள்ள ஆக்டிவ் நோயாளிகளின் சதவிகிதம் மொத்த தொற்று பாதிப்பில் 3.66 சதவிகிதம் மட்டுமே.
மிகவும் மோசமாக பாதிக்கப்பட்ட மாநிலங்களில், தொடர்ந்து கொரோனா பாதிப்பு குறைந்து வருவதாக அமைச்சகம் வெளியிட்டுள்ள தகவல்கள் தெரிவிக்கின்றன.
விரைவில், கொரோனா தொற்று நோயை இந்தியா வென்றுவிடும் என்ற நம்பிக்கை பிறந்துள்ளது.
ALSO READ | கொரோனா தடுப்பூசிக்கு பிறகு 2 மாதங்களுக்கு No Alcohol: நிபுணர்கள் அறிவுரை
தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR