விவசாயிகளுக்கு உதவும் வகையில் விவசாயத்தில் நவீன தொழில்நுட்பங்களை மத்தியஅரசு கொண்டுவருகிறது என பிரதமர் மோடி!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

வரும் 2019 ஆம் ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் மீண்டும் மத்தியில் ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என்பதில் பா.ஜ.க. தீவிரமாக இறங்கியுள்ளது. இதன் முதற்கட்டமாக பிரதமர் மோடி பிரட்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில், இன்று மேற்குவங்கம் சென்ற பிரதமர் மோடிக்கு திரிணாமுல் காங்கிரசின் சார்பில் கருப்புக்கொடி காட்டப்பட்டது. 


இதை தொடர்ந்து, கிசான் கல்யான் பேரணியில் விவசாயிகளுடன் பிரதமர் மோடி உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது...! பிரமான்றமாக கொடி அசைத்து எங்களை வரவேற்ற சகோதரை மம்தாவுக்கு நன்றி என தனது உரையை துவங்கினார். இந்த ஆண்டில் பல சாதனைகளை பா.ஜ.க நிகழ்த்தியுள்ளது. அதில், குறிப்பாக நெல்லுக்கான ஆதார விலையை உயர்த்தியது வரலாற்று சாதனை. இந்த நடவடிக்கையை இதற்க்கு முன்னர் எந்த அரசும் எடுக்க வில்லை என்றும் அவர் கூறினார். மேலும், அவர் 2022-ல் விவசாயிகளின் வருமானத்தை அரசு இருமடங்கு ஆக்கும் எனவும், மத்திய அரசு ஏழைகள் மீது முழுக்க முழுக்க அக்கறை கொண்டுள்ளது. 


இதுவரையில், மேற்குவங்கத்தில் விவசாயிகளுக்கு எந்த பலனும் கிடைக்கவில்லை, இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பும் இல்லை. விவசாயிகளுக்கு உதவும் வகையில் விவசாயத்தில் நவீன தொழில்நுட்பங்களை மத்திய அரசு கொண்டுவருகிறது. விலை பொருட்களுக்கான குறைந்தபட்ச ஆதார விலையை மம்தா அரசு உயர்த்தவில்லை. மேலும், விவசாயிகள் மீது மம்தாவுக்கு அக்கறையில்லை என்றும் மேற்குவங்கம் நிதி நிறுவன மோசடிக்கு பெயர் போனது எனவும் உரையாற்றினார்.