பாராளுமன்றத்தில் அதிமுக எம்.பிக்கள் அமளி
அதிமுக எம்பி-க்களின் அமளி காரணமாக மக்களவையை தொடர்ந்து, மாநிலங்களவையும் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
புதுடெல்லி: அதிமுக எம்பி-க்களின் அமளி காரணமாக மக்களவையை தொடர்ந்து, மாநிலங்களவையும் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
அதிமுக சட்டமன்ற கட்சித் தலைவராக அக்கட்சியின் பொதுச் செயலாளர் சசிகலாவை கடந்த 5-ம் தேதி எம்.எல்.ஏ.க்கள் ஒருமனதாக தேர்ந்தெடுத்தனர். இது தொடர்பான ஆவணங்கள் கவர்னர் வித்யாசாகர் ராவிடம் அளிக்கபட்டு ஆட்சி அமைக்க உரிமை கோரபட்டது. ஆனால் கவர்னரிடம் இருந்து எந்த பதிலும் இல்லை.
இந்நிலையில் இன்று பாராளுமன்றம் கூடியதும் இரு அவைகளிலும் அதிமுக எம்.பிக்கள் அமளியில் ஈடுபட்டனர். அதிமுக பதவி ஏற்பதில் கவர்னர் காலதாமத படுத்துவதாக கோஷம் எழுப்பினர். அதிமுக எம்.பி.க்களின் அமளியில் பாராளுமன்றத்தின் இரு அவைகளும் மதியம் 12 மணி வரை ஒத்திவைக்கபட்டது.