கைக்குழந்தையை 3வது மாடியில் இருந்து கீழே வீசிய குரங்கு கூட்டம்!
உத்தர பிரதேசத்தில் 4 மாத கைக்குழந்தையை 3 வது மாடியில் இருந்து குரங்குக்கூட்டம் தூக்கி வீசியதில் குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது.
உத்தர பிரதேசம், பரெய்லி மாவட்டத்தில் துங்கா கிராமத்தில் வசித்து வருபவர் நிர்தேஷ் உபதியே (25). இவருக்கும் ரேஷ்மி என்ற பெண்ணிற்கும் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடைபெற்றது. இருவரும் 3 அடுக்கு மாடி குடியிருப்பில் வசித்து வந்தனர்.
இதையடுத்து இருவருக்கும் கடந்த மார்ச் மாதத்தில் ஒரு ஆண் குழந்தை பிறந்துள்ளது. மாலை வேளையில் இருவரும் தங்களது 4 மாதக் குழந்தையோடு மொட்டை மாடியில் நேரம் செலவிடுவதை வழக்கமாக வைத்திருந்த இந்த தம்பதிக்கு 2 நாட்களுக்கு முன்பு மீளமுடியாத சோகம் நிகழ்ந்தது.
அது என்னவென்றால், இரு தினங்களுக்கு முன்பு அக் குழந்தையுடன் தங்களது வீட்டின் மொட்டை மாடியில் வழக்கம்போல இருவரும் வாக்கிங் சென்றுள்ளனர். எதிர்பாராவிதமாக 10 க்கும் மேற்பட்ட குரங்குகள் நிர்தேஷ்-ரேஷ்மி தம்பதியினரை சூழ்ந்தன.
மேலும் படிக்க | கள்ளக்குறிச்சி மாணவி மரணம் : பள்ளி தாளாளர் உட்பட 3 பேர் கைது
திடீரென அவர்களை சூழ்ந்ததால் இருவரும் நிலை தடுமாறினர். குழந்தை நிர்தேஷின் கையில் இருந்த நிலையில், இருவரும் குரங்குகளை விரட்ட முற்பட்டனர். ஆனால் குரங்குகள் விடாப்பிடியாக நிர்தேஷ் மற்றும் ரேஷ்மியை பிடித்துக்கொண்டு அட்டகாசம் செய்துள்ளன.
இந்த போராட்டத்தில் குழந்தையோடு மாடி படியின் கதவை திறக்க முற்பட்ட நிர்தேஷின் கைகளில் இருந்து குழந்தை சற்று நழுவியது. அந்த குறிப்பிட்ட நேரத்தில் குரங்குகள் குழந்தையை நிர்தேஷிடம் இருந்து பிடுங்கின.
பின்னர் கண் இமைக்கும் நேரத்தில் குரங்குகள் குழந்தையை தூக்கி 3வது மாடியில் இருந்து கீழே வீசின. இதைக்கண்டு அதிர்ச்சியுற்ற நிர்தேஷ், ரேஷ்மி குழந்தை விழுந்த இடத்தை நோக்கி விரைந்து சென்று பார்த்தனர். ஆனால் அக்குழந்தை சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்து கிடந்தது. இதையடுத்து குழந்தையின் உடல் மீட்கப்பட்டு, இறுதி சடங்குகள் செய்யப்பட்டன.
பரெய்லி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் குரங்குகள் கூட்டம் மிகவும் அதிகமாக காணப்படுகின்றன. இவை அங்குள்ள மக்களுக்கு தினசரி தொல்லை கொடுத்து வருகின்றன. மாடிகளில் எப்போதும் குரங்குகள் இருப்பது வழக்கமான ஒன்றாக கருதப்பட்டாலும், குழந்தையின் உயிரிழப்பை குரங்குகள் ஏற்படுத்தியிருப்பதை அப்பகுதி மக்கள் பொருத்துக்கொள்ள முடியாமல் தவிக்கின்றனர்.
இவ்வாறு, குரங்குகளின் அட்டகாசம் குறித்து தொடர்ந்து புகாரளித்து வந்தும் அம்மாநில அரசு எவ்வித உதவியும் நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பது வருத்தமளிப்பதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ