ஒரு பெண்ணிற்கு அவரது மகனே, மனைவி மற்றும் அவரது குடும்பத்தாருடன் இணைந்து, கொலை செய்ய முயற்சி செய்த சம்பவம் உத்திரப்பிரதேசத்தில் நட்ந்துள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

உத்திரபிரதேசத்தில்  (Uttar pradesh)  உள்ள ஷாஜஹான்பூர் பகுதியில் குடும்ப தகராறு தொடர்பாக ஜலாலாபாத் பகுதியில் ஒரு பெண்ணிற்கு, அவளது  மகன், மருமகள் மற்றும் பிறரால் திங்கள்கிழமை அன்று தீ வைத்த சம்பவம் அங்கே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது


ஷாஜஹான்பூரில் உள்ள  ரத்னா தேவி (58) என்பவருக்கு அவரது மகன் ஆகாஷ் குப்தா, அவரது மனைவி தீப் ஷிகா மற்றும் ஆகாஷின் மாமியார் ஆகியோர், குடும்ப தகராறு காரணமாக அவரை கொலை செய்ய, அவருக்கு தீ வைத்ததாக, அப்பகுதியின் காவல் துறை கண்காணிப்பாளர் அபர்ணா கவுதம் தெரிவித்தார்.


தீ வைக்கப்பட்ட அந்த பெண்ணின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் விரைந்து வந்து, அவரை உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.


இங்குள்ள மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பெண்ணின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாகவும் காவல் துறை கண்காணிப்பாளர் தெரிவித்தார். 


இதுதொடர்பாக பாதிக்கப்பட்டவரின் மற்றொரு மகன் கிஷன் குப்தா என்பவரால், முதல் தகவல் அறிக்கை  எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டு, அது தொடர்பாக, ஆகாஷ் குப்தா மற்றும் வேறு இரண்டு பேரை போலீசார் காவலில் வைத்துள்ளனர்


ஒரு பெண் தீ வைக்கப்பட்ட இந்த அதிர்ச்சியான சம்பவம் தொடர்பான விவகாரத்தில் விசாரணை நடந்து வருவதாக காவல் துறை அதிகாரி மேலும் தெரிவித்தார்.


ALSO READ | பாதுகாப்பு படையினரின் மிகப்பெரிய வெற்றியாக ஹிஸ்புல் கமாண்டர் கொலை..!!


தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR