குஜராத் மாநிலத்தின், வதோத்ராவில், பட்ரா கிராமத்தில் வசிக்கும் 35 வயது புனி என்ற பெண் ஒருவர் தனது 42 வயது கணவரான ராஜேஷை கொன்றதுடன், அவர் குடிபோதையில் இறந்து விட்டார் என கூறி விட்டார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்த சம்பவம் சென்ற வாரம் நடந்தது.  கணவர் இறந்தவுடன் நடத்தப்பட்ட பிரேத பரிசோதனையில், அவர் இயற்கையான முறையில் இறக்கவில்லை என்பது தெரிய வந்தது. அவரது விலா எலும்பு நொறுங்கி இருந்ததுடன்,  நுரையீரலும் பாதிக்கப்பட்டிருந்தது.


ALSO READ | பலூன் போல பெருத்துக் கொண்டே போகும் வயிறு; மர்மமான நோய்.. அவதிப்படும் பெண்..


தாய் வீட்டிற்கு சென்றிருந்த தனது மனைவி புனியை சந்திக்க, கணவர் ராஜேஷ் ஆக்ஸ்ட் 3ம் தேதி  அங்கு சென்றிருந்தார். அங்கு இருவருக்கும் இடையே ஏற்பட்ட சண்டையில், புனி கணவனை மார்பில் எட்டி உதைக்க அவர் கீழே விழுந்து இறந்து விட்டார்.


ரக்‌ஷா பந்தன் வாழ்த்து சொல்ல ராஜேஷின் சகோதரி, அவரி தொலைபேசியில் அழைத்த போது, அவர் குடி போதையில் கீழே விழுந்து இறந்து விட்டதாக குறிப்பிட்டார்.


ராஜேஷின் அம்மாவிற்கு, மகனது உடலில் காயங்களை பார்த்ததும் சந்தேகம் வந்தது. அவர் போலீஸாரிடம் தன் மகன் எப்போதாவது தான் குடிப்பார் என்றும், மருமகள் தான் தினமும் குடிக்கும் பழக்கம் உள்ளது என்று கூறினார்.


அவர் தனது மகனின் உடலை பிரேத பரிசோதனை செய்ய வேண்டும் எனக் கூறினார்.


ALSO READ | Watch Video: நெடுஞ்சாலையில் வாக்கிங் போகும் முதலை…!!!


பிரேத பரிசோதனையில் இவ்வாறு அறிக்கை வந்ததும், மனைவி புனியிடம் விசாரணை மேற்கொண்டதில் அவர், தங்களுக்குள் ஏற்பட்ட சண்டையில் தான், அடித்ததாகவும், அதில் அவர் கணவன் இறந்து விட்டதாகவும் ஒப்புக் கொண்டார்.


பின்னர் அவருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு, அவருக்கு தொற்று இல்லை என்பது உறுதியானதை அடுத்து அவரை போலீஸார் கைது செய்தனர்.