நெடுஞ்சாலை மனிதர்களுக்கு மட்டுமே சொந்தமான இடமா என்ன. அதில் நானும் வாக்கிங் போகலாம என கிளம்பி விட்டது ஒரு முதலை.
ஆம். மத்திய பிரதேசத்தின் ஷிவ்புரியில், நெடுசாலையில் முதலை கடந்து சென்ற காட்சியை படம் பிடித்த மக்கள் அதனை சமூக ஊடகத்தில் பதிவிட்டனர். அது மிகவும் வைரலாகி விட்டது.
#Crocodile rescue from #Shivpuri Madhya Pradesh. @susantananda3 @arunbothra @anandmahindra #crocodile pic.twitter.com/pDJkIqbWNT
— Sandeep Seth (@sandipseth) August 6, 2020
மத்திய பிரதேசத்தின் ரன்னாட் கிராமத்தில் கால்நடைகளை மேய்வதற்காக கூட்டிச் சென்ற சில கிராம வாசிகள், அவர்கள் ஒரு முதலை சென்று கொண்டிருப்பதை பார்த்தனர்.
நெடுஞ்சாலையில் வாகனங்கள் சென்று கொண்டிருந்ததால், சாலையை கடக்க அது காத்திருந்தது.
முதலை சாலையை கடக்க உதவும் வகையில், வாகனங்கள் நிறுத்தப்பட்டன.
ALSO READ | பலூன் போல பெருத்துக் கொண்டே போகும் வயிறு; மர்மமான நோய்.. அவதிப்படும் பெண்..
பின்னர் அங்கிருந்த மக்கள் அதனை தங்களது மொபைல் தொலைபேசியில் பதிவு செய்து சமூக ஊடகத்தில் பதிவு செய்தவுடன் அது மிகவும் வைரலாகியது.
கிராம மக்கள் இந்த முதலை குறித்து வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்த பின், அதிகாரிகள் அதனை மீட்டு, குளத்தில் கொண்டு போய் சேர்த்தனர்.
மழை காலங்களில், இது போன்று முதலைகள் ஏரியில் இருந்தும் குளத்தில் இருந்தும் வெளியே வருவதை பார்க்கலாம் என கிராமவாசிகள் கூறுகின்றனர்.
ALSO READ | உலகின் முதல் கொரோனா வைரஸ் தடுப்பூசியை பதிவு செய்யும் ரஷ்யா…!!!
சென்ற வாரம், இதே போன்ற ஒரு சம்பவத்தில் உத்திரபிரதேசத்தின் ஃபிரோஸாபாத்தில், 5 அடி நீளமுள்ள முதலை ஒன்று ஒரு வீட்டில் உள்ள கழிப்பறையில் நுழைந்தது.
பயங்கரமான தோற்றம் கொண்ட முதலை ஊர்வன இனத்தைச் சேர்ந்த ஒரு விலங்கு. இதன் வால் மிகவும் பலம் பொருந்தியது. ஒரே அடியில் இரையை வீழ்த்தும் தன்மை கொண்டது. இது நீரிலும், நிலத்திலும் வாழ வல்லது. ஆசியா, ஆப்பிரிக்கா, ஆசியா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா ஆகிய கண்டங்களின் வெப்ப மண்டலங்களில் அதிக அளவில் காணப்படுகிறது.