#ShujaatBukhari கொலையில் சிசிடிவி காட்சி முக்கிய அதாரம்!
பத்திரிகையாளர் சுஜாத் புஹாரி கொல்லப்பட்ட சம்பவம் கோழைத்தனமான செயல் -ஜம்மு-காஷ்மீர் துணை முதல்வர் கவிந்தர் குப்தா குற்றசாட்டு!
பத்திரிகையாளர் சுஜாத் புஹாரி கொல்லப்பட்ட சம்பவம் கோழைத்தனமான செயல் -ஜம்மு-காஷ்மீர் துணை முதல்வர் கவிந்தர் குப்தா குற்றசாட்டு!
ஜம்மு மற்றும் காஷ்மீர் மாநிலம் ஶ்ரீநகர் பகுதியிலிருந்து `ரைசிங் காஷ்மீர்’ பத்திரிகையின் ஆசிரியர் சுஜாத் புஹாரி காரில் வீட்டுக்குத் சென்றுகொண்டிருந்த போது அவரை வழிமறித்த அடையாளம் தெரியாத மர்ம நபர்கள், அவரை நோக்கி துப்பாக்கியால் சரமாரியாகச் சுட்டனர்.
இந்தத் தாக்குதலில் அவர் பரிதாபமாக உயிரிழந்தார். மேலும், அவரின் பாதுகாவலர்கள் இருவர் காயம் அடைந்தனர். இந்தச் சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
பொதுமக்கள் அஞ்சலிக்கு பிறகு சுஜாத் புகாரியின் உடலுக்கு உறவினர்கள் இறுதி சடங்குகளை செய்தனர். பின்னர் சுஜாத் புகாரி இறுதி ஊர்வலத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர். இதனைத் தொடர்ந்து அவரது உடல் சொந்த ஊரில் நல்லடக்கம் செய்யப்பட்டது.
இதையடுத்து, பத்திரிகையாளர் சுஜாத் புஹாரி கொல்லப்பட்ட சம்பவம் கோழைத்தனமான செயல். பத்திரிகையாளர் கொல்லப்பட்ட சம்பவத்தில் சிசிடிவி காட்சிப்பதிவு விசாரணையில் முக்கிய பங்கு வகிக்கும். பாதுகாப்பு நிலையை மாநில அரசும், மத்திய அரசும் மறு ஆய்வு செய்யும் என்றும் ஜம்மு-காஷ்மீர் துணை முதல்வர் கவிந்தர் குப்தா தெரிவித்துள்ளார்.