Income Tax Refund: ரீபண்ட் கிடைக்கவில்லை என்றால் உடனடியாக விண்ணப்பிக்கவும்..!!
வருமான வரித் துறை, வரி செலுத்துவோரிடம் 2020-21 நிதியாண்டில் நிலுவையில் உள்ள வருமான வரி ரீபண்ட் தொகை தொடர்பாக ஆன்லைனில் நோடீஸ்களுக்கான பதிலை விரைவாக பதிவு செய்யுமாறு கேட்டுக் கொண்டுள்ளது.
Income Tax Refund: உங்களுக்கும் உங்கள் வருமான வரித் தொகை திரும்ப கிடைக்கவில்லை என்றால், இது உங்களுக்கான முக்கிய செய்தியாகும். வருமான வரித் துறை, வரி செலுத்துவோரிடம் 2020-21 நிதியாண்டில் நிலுவையில் உள்ள வருமான வரி ரீபண்ட் தொகை தொடர்பாக ஆன்லைனில் நோடீஸ்களுக்கான பதிலை விரைவாக பதிவு செய்யுமாறு கேட்டுக் கொண்டுள்ளது.
வருமான வரி ரீபண்டிற்கான 93% க்ளைம் வழங்கப்பட்டுள்ளது.
வருமான வரித் துறை வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிக்கையில், 2020-21 மதிப்பீட்டு ஆண்டுக்காக தாக்கல் செய்யப்பட்ட வருமான வரி கணக்குகளில் செய்யப்பட்ட 93 % வரி ரீபண்ட் கோரிக்கைகள் இதுவரை நிறைவேற்றப்பட்டுள்ளன. கடந்த வாரம், ரூ.15,269 கோடி என்ற அளவிற்கு வரி ரீபண்ட் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றும், விரைவில் வரி செலுத்துவோர் கணக்கிற்கு மாற்றப்படும் எனவும் கூறினார்.
ரீபண்ட் கொடுக்கப்படாதவர்களுக்கு விரைவில் வழங்க நடவடிக்கை
2020-21 மதிப்பீட்டு ஆண்டிற்கான நிலுவையில் உள்ள ரீபண்ட் தொகையை, வழங்குவதற்கான நடவடிக்கை தொடங்கப்பட்டுள்ளது என்றும், இதற்கு வரி செலுத்துவோருக்கு வழங்கப்பட்டுள்ள நோட்டீஸிற்கான பதில தேவைப்படுகிறது என வருமான வரித் துறை கூறியுள்ளது. வருமான வரிச் சட்டத்தின் பிரிவு 245 இன் கீழ் வங்கி கணக்குகள் மூலம் சரிபார்த்தல், தவறான தகவல்களை சரி செய்தல் ஆகியவை காரணமாக வரி ரீபண்ட் செலுத்தப்படவில்லை என வருமான வரித் துறை தெரிவித்துள்ளது.
ALSO READ | Income Tax Refund: வருமான வரி ரீபண்ட் நிலையை அறிந்து கொள்வது எப்படி..!!
ரீபண்ட் நடைமுறை
2020-21 மதிப்பீட்டு ஆண்டிற்கான வருமான வரி ரீபண்டை நடைமுறை படுத்த விரைவாகச் செய்ய வருமான வரித் துறை வரி செலுத்துவோரை விரைவாக பதிலளிக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளது. 2021-22 மதிப்பீட்டு ஆண்டிற்கான ITR -1 மற்றும் ITR -4க்கான ரிபண்ட் நடவடிக்கையை தொடங்கியுள்ளதாகவும் வருமான வரித்துறை தெரிவித்துள்ளது
கடந்த ஆண்டு ரீபண்ட் செய்யப்பட்ட தொகை
2021-22 நிதியாண்டில், வருமான வரித்துறை ஆகஸ்ட் 23 வரை 51,531 கோடி ரூபாய்க்கு மேல் வரிப் பணத்தைத் திரும்பப் பெற்றுள்ளது. இதில் 21,70,134 வழக்குகளில் ரூ .14,835 கோடி வருமான வரி திருப்பி செலுத்தப்பட்டுள்ளது. 1,28,870 வழக்குகளில் ரூ .36,696 கோடி கார்ப்பரேட் வரி ரீபண்ட் செய்யப்பட்டுள்ளது. கடந்த 2020-21 நிதியாண்டில், 2.37 கோடிக்கும் அதிகமான வரி செலுத்துவோருக்கு 2.62 லட்சம் கோடி ரூபாய் ரீபண்ட் செலுத்தப்பட்டது.
ALSO READ | வரி செலுத்துவோருக்கு அதிர்ச்சி தகவல்! IT ரீபண்ட் கிடைப்பதில் தாமதம்
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.
Android Link: https://bit.ly/3hDyh4G
Apple Link: https://apple.co/3loQYeR