வட மாநிலங்களில் மற்றும் டெல்லி உள்ளிட்ட பகுதிகளில் சில தினங்களாக கடும் பனிப்பொழிவு நிலவி வருகிறது. இன்று அதிகாலை முதல் அடர்ந்த பனிமூட்டம் மற்றும் காற்று வீசுவதால் சாலை, ரயில் மற்றும் விமான போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இதை தொடர்ந்து, போக்குவரத்து பாதிப்பு ஏற்ப்பட்டு வருகிறது. பனிமூட்டத்தின் காரணமாக மக்கள் நடமாட்டம் குறைந்தே காணப்பட்டது. பல இடங்களில் ரயில்கள் பாதியிலேயே நிறுத்தப்பட்டன.


இந்நிலையில் டெல்லியில் குறைந்த காண்புதிறன், பனிமூட்டம் ஆகியவற்றின் காரணமாக ரயில்களின் வருகை மற்றும் புறப்பாட்டில் தாமதம் ஏற்பட்டுள்ளது.